உச்சகதிர் ஏற்பளவு

எந்த கதிர் வீச்சின் ஏற்பளவின் விழுக்காட்டில் ஆழ கதிர்ஏற்பளவு கணக்கிடப்படுகிறதோ அந்த ஏற்பளவு உச்ச கதிர்ஏற்பளவு (Dosemax) எனப்படுகிறது. கிலோ வோல்ட் (KV) கதிர்களுக்கு இந்த உச்சஅளவு தோல்பரப்பிலேயே உள்ளது. ஆனால் மெகா வோல்ட் (MV ) கதிர்களுக்கு இந்த உச்ச அளவு தோல்பரப்பிற்கு சில மி.மீ. அடியில் உள்ளது. இதனால் கதிர்வீச்சின் விளைவுகள் தோலில் எளிதில் தென்படுவதில்லை. தோல்நிறம் மாறுவதோ புண்படுவதோ அரிப்பு ஏற்படுவதோ இல்லை. இதனை தோல் காப்பு விளைவு (Skin Sparing effect) எனலாம். கோபால்ட் காமா கதிர்களின் ஆற்றல் 1.25 மில்லியன் எலக்ட்ரான் வோல்டிற்குச் சமமாகும். இக்கதிர்களுக்கு உச்சஏற்பளவு தோலின் அடியில் 0.5 செ.மீ-ல் காணப்படுகிறது. மெகா வோல்ட் கதிர்களுக்கு, அந்த மின்னழுத்தத்தினை 4 ஆல் வகுத்து, உச்ச கதிர்ஏற்பளவு புள்ளியினை செ.மீ-ல் தெரிந்து கொள்ளலாம்.

BARC notes .

"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சகதிர்_ஏற்பளவு&oldid=2746010" இலிருந்து மீள்விக்கப்பட்டது