உச்சம்பட்டி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் திண்டல் பஞ்சாயத்துக்கு உட்பட்டது உச்சம்பட்டி கிராமம். காரிமங்கலத்திலிருந்து மொரப்பூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலுமே பிரதானமாக உள்ளது.

விவசாயம் தொகு

விவசாயம் என்பது மழை பெய்தால் நெல் வாழை மஞ்சள் வெங்காயம் வெண்டை சாமந்தி சம்பங்கி உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

கோவில்கள் தொகு

இவ்வூரில் அமைந்துள்ள கோயில்கள்:

  • முத்தமிழ் முருகன் கோயில்
  • ஐயப்பன் கோயில்

திருவிழாக்கள் தொகு

பங்குனி உத்திர தோ்த்திருவிழா ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகையும் இங்கு வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

மாாியம்மன் திருவிழா என்பது ஊாின் நிலையைப் பொறுத்து மழை பெய்து செழிப்பாக இருந்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மேலும் உச்சம்பட்டி, சப்பானிப்பட்டி, அடிலம், பொன்னோி, சிக்கத்திம்மனஅள்ளி ஆகிய ஐந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் மண்டு செய்தல் வெகு விமா்சியாக நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையின் பாேது ஊா் முழுவதும் சோ்ந்து வழிபாடு நடத்துகின்றனா்.

வெளியிணைப்புகள் தொகு

https://www.maalaimalar.com/news/district/2020/02/14222731/1286016/drinking-water-ask-woman-siege-near-kaveripattinam.vpf

"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சம்பட்டி&oldid=3600783" இலிருந்து மீள்விக்கப்பட்டது