உச்சைச்சிரவம்


இந்து தொன்மவியலின் அடிப்படையில் உச்சைச்சிரவம் என்பது ஏழு தலைகளை கொண்ட பறக்கும் சக்தி பெற்ற வெள்ளை குதிரையாகும். அமிர்தத்திற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய உயிரனங்களில் இந்த வெள்ளைக் குதிரையும் ஒன்றாகும். [1]

இக்குதிரையானது மற்ற குதிரைகளுக்கு அரசனாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது.

சௌர மதக் கடவுளான சூரியனின் வாகனமாக அறியப்படும் இக்குதிரை, தேவர்களின் தலைவனான இந்திரனுடைய வாகனம் என்றும், அசுரர்களின் தலைவனான மகாபலியின் வாகனம் என்றும் இக்குதிரை கருதப்படுகிறது.

உச்சைச்சரவத்தின் ஓவியம்

மகாபாரதம், இராமயணம் போன்ற இதிகாசங்களிலும், கூர்ம புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம் போன்றவற்றிலும் இந்தக் குதிரையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

காசியப முனிவரின் இரு மனைவர்களுக்கும் தீராத பகை இருந்தது. கத்துருவும், விநதையும் வானில் சென்ற தேவலோக குதிரையான உச்சைச்சிரவத்தினைக் கண்டார்கள். அதன் வாலின் நிறம் வெண்மை. கருமை என சண்டையிட்டுக் கொண்டனர். வெண் குதிரையான உச்சைச்சிரவத்தின் வாலில் கத்துருவின் புதல்வர்களான நாகங்களை அமர்ந்து கருப்பாக தோன்றச் செய்து வெற்றி பெற்றனர்.

அதனால் கருடனும், அவர் தாயும் நாகங்களின் தாயான கத்துருவிடம் அடிமையாக இருந்தனர். அவர்களை விடுவிக்க கருடன் அமுதக்கலசத்தினை எடுத்துவந்து அடிமைதனத்திலிருந்து விடுபட்டார்.

கருவி நூல் தொகு

மச்ச புராணம்

ஆதாரங்கள் தொகு

  1. http://tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=774

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சைச்சிரவம்&oldid=2753850" இலிருந்து மீள்விக்கப்பட்டது