உடற்குழிஉயிரணு
உடற்குழிஉயிரணு (Coelomocyte)(/ˈsiːləmoʊˌsaɪt/) என்பது விலங்குகளின் உடற்குழியில் காணப்படும் விழுங்கும் உயிரணுக்கள் ஆகும். பெரும்பாலான உயிரிணக்களில் இந்த உயிரணுக்கள், பாக்டீரியா மற்றும் தீநுண்மி போன்ற ஊடுருவி வரும் உயிரினங்களை உறையிடுதல் மற்றும் உயிரணு விழுங்குதல் மூலம் தாக்கி அழிக்கின்றது, இருப்பினும் சில விலங்குகளில் (எ.கா., நூற்புழு புழு கெய்னோராப்டிடிசு எலிகன்சு) இது உயிரணு விழுங்குதல் திறன் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.[1] உடற்குழிஉயிரணு உடல் சுவரில் நிலையாகக் காணப்படலாம் அல்லது உடற்குழிக்குள் சுதந்திரமாக மிதந்து கொண்டிருக்கலாம்.[2]
உடற்குழிஉயிரணு என்ற சொல்லானது பண்டை கிரேக்க koílōma, "குழி" அல்லது "வெற்றிடம்", மற்றும் kýtos, "கொள்கலன்" ஆகியவற்றிலிருந்து வந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Altun, Z.F.; Hall, David H. (2009), "Coelomocyte system", Wormbook, The C. elegans Research Community, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3908/wormatlas.1.11
- ↑ Julius M. Cruse; Robert E. Lewis (12 January 2010). Atlas of Immunology, Second Edition. Taylor & Francis. p. 708. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-3994-8. பார்க்கப்பட்ட நாள் 1 September 2013.