உடற்குழிகள்

உடற் குழி என்பது விலங்கொன்றின் உடலில் உள்ள எந்தவொரு திறவெளி அல்லது அறைகளைக் குறிப்பதாகும். இந்தக் குழிகளில் உள்ளுறுப்புகளும் பிற அமைப்புகளும் அடங்கியுள்ளன. இரட்டைச் சுவர் உள்ள குழிகளின் நடுவே உள்ள "வாய்ப்புள்ள வெளி"யில் சிறிதே நீர்மம் இருக்கும்.

உடற் குழி
Scheme body cavities-en.svg
மனித உடலொன்றில் உள்ள பல்வேறு குழிகளைக் காட்டிடும் குறுக்குவெட்டுப் படம். முதுகுப்புற, கீழ்ப்புற குழிகள் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
Annelid redone w white background.svg
சிலசுணையுடலி புழு ஒன்றின் குறுக்குவெட்டு. புழுவின் உடற்பகுதி குழி மையத்திலுள்ள குருட்டுமடியைச் சூழ்ந்துள்ளது.
அடையாளங்காட்டிகள்
FMA85006
உடற்கூற்றியல்

மனித உடலின் இரு பெரும் உடற்குழிகள் கீழ்ப்புற உடற்குழியும் முதுகுப்புற உடற்குழியும் ஆகும். முதுகுப்புற குழியில் மூளையும் முள்ளந்தண்டு வடமும் அமைந்துள்ளன.

மைய நரம்பு மண்டலத்து உறுப்புகளைச் சூழ்ந்துள்ள சவ்வுகள் (மண்டையோடு, முள்ளந்தண்டுக் குழிகளிலும் உள்ள மனித மூளை, முள்ளந்தண்டு வடம்) மூன்று மூளையுறைகள் ஆகும். வெவ்வேறாக பூசப்பட்டுள்ள இந்த வெளிகளில் வெவ்வேறு வகையான நீர்மங்கள் உள்ளன. காட்டாக மூளையுறையில் மூளை தண்டுவட திரவமும் வயிற்றுக் குழியில் உள்ள வயிற்று உள்ளறையில் சீர நீர்மமும் உள்ளன.

அமினியன் விலங்குகளிலும் சில முதுகெலும்பிலிகளிலும் வயிற்று உள்ளறை அவற்றின் மிகப் பெரிய உடற்குழியான சீலம் (coelom) எனும் உடற்குழியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்குழிகள்&oldid=3297117" இருந்து மீள்விக்கப்பட்டது