உடலை துளையிடுதல்

உடலை துளையிடுதல் என்பது இரு பாலரும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை பழக்கம் ஆகும். இது பல நூற்றாண்டுகளாக பல நாடுகளில் இருந்து வருகிறது. உடல் துளையிடுதல் சில நேரங்களில் ஆபத்தானதாக இருந்தாலும் மக்களிடையே இது உள்ள பழக்கமாக இருந்து வருகிறது. இம்முறையில் உடல் பாகத்தில் துளையிட்டு அணிகலன்கள் அணிவது என ஒரு பண்பாடாக இருக்கிறது.

எலேயன் டேவிட்சன், 2009 ஆம் ஆண்டு உலகில் அதிக உடல் துளையிட்டுக்கொண்ட பெண்

தமிழரும் உடல் துளையிடுதலும்தொகு

 
மூக்குத்தி அணிந்த இந்திய பெண்

தமிழ் மக்களிடையே மத நம்பிக்கை சார்ந்ததாகவும் கலாச்சார பண்பாடு சார்ந்ததாகவும் உடல் துளையிடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.[1]

காது குத்துதல்தொகு

 
தோடு

தமிழர் மரபில் குழந்தை பிறந்த பதினோராம் மாதம் அல்லது ஒன்று, மூன்று, ஐந்து என ஒற்றைப்படை வயதில் காது குத்துதல் என்ற சடங்கை இருபாலருக்கும் செய்விக்கின்றனர்.காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு சடங்காகும். இந்த சடங்கில் குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது. இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது.நல்ல நாள் மற்றும் நேரத்தினை கணக்கிட்டு காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். தமிழ்ச் சாதிகளில் பெரும்பாலும் குலதெய்வ கோயில்களில் முடி எடுத்தல் மற்றும் காதுகுத்தல் நடைபெறுகிறது. சிலர் வீடுகளிலும், மண்டபங்களிலும் விழா நிகழ்த்துகின்றனர். இடம் மற்றும் காலம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டதும்,. முக்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு வாய்மொழியாகவோ, பத்திரிக்கை அடித்து கொடுத்தோ செய்தியினை தெரிவிக்கின்றனர்.தோடு (earring) காதில் அணியப்படும் ஓர் ஆபரணமாகும். பெண்களால் அதிகமாகவும் ஆண்களால் ஓரளவும் அணியப்படுகிறது. ஆண்கள் அணியும் தோடு கடுக்கன் எனப்படுகிறது. காதுச் சோணையில் துவாரமிட்டே தோடு அணியப்படுகிறது. உலோகம், நெகிழி, கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களால் தோடு செய்யப்படுகிறது. தமிழர் உட்பட்ட பல இனத்தவரால் பெண் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே காது குத்தப்பட்டுத் தோடு அணிவிக்கப்படுகிறது. இதனை ஒரு சடங்காகவும் கொண்டாடுவதுண்டு. திருமணத்தின்போது ஆணுக்குக் கடுக்கன் பூட்டும் வழக்கம் சில பிரதேசத் தமிழர் திருமணங்களில் வழக்கமாக இருந்தது. இப்போது அவ் வழக்கம் அருகிவிட்டது.

மூக்கு குத்துதல்தொகு

பெரும்பாலும் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இந்த சடங்கை செய்கின்றனர். மூக்குத்தி (Nose-jewel) என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை. இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன. பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள். பெரும்பாலும் மூக்குத்தி உள்ளிட்ட மூக்கணிகள் தங்கத்திலேயே செய்யப்படுகின்றன. வெள்ளி, பித்தளையும் பயன்படுவதுண்டு.மூக்கின் எந்த பகுதியையும் தோலை அல்லது குருத்தெலும்புகள் மூடியிருக்கும் இடத்தில், பொதுவாக நகைகளை அணிந்து கொள்வதற்காக, மூக்குத்தி (மூக்கு குத்துதல்-நகை) என அழைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான மூக்கு துளையிடல் வகைகளில் இது பொதுவானது. ஆனால் குழந்தை மூன்றாவதும் ஆண் வாரிசாகவே பிறந்தால் சிலர் மூக்கை துளைத்து மூக்குத்தி அணிவித்து சடங்கை செய்கின்றனர்.

 
மூக்குத்தி அணிந்திருக்கும் தமிழ்ப் பெண்

அலகு குத்துதல்தொகு

 
அலகு குத்துதல்

அலகு குத்துதல் என்பது தமிழ்க் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறும். பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கிக் குத்துவதுமுண்டு.

மேலைநாடுகளில் உடல் துளையிடுதல்தொகு

வரலாறுதொகு

உடல் துளையிடுதல் சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் தீவிர அறிவார்ந்த ஆய்வுக்கு உட்பட்டது.அவை முதன்மை ஆதாரங்களின் ஒரு ஸ்பேஸிட்டி மூலம் உடல் குத்துவதைப் பற்றிக் கலக்கத்தில் ஆராய்கின்றனர்.ஆரம்ப பதிவுகளானது துளையிடுதல்கள் அல்லது அவற்றின் பொருளைப் பயன்படுத்துவதை அரிதாகவே விவாதித்துக்கொண்டிருக்கின்றனர்[2] .அதே சமயம் நகைகளை சாதாரணமான பொருட்களிலும் பயன்படுத்தி துளையிடுதலை பொதுவாகக் காணலாம். ஒருமுறை அலங்கரிக்கப்பட்ட உடலில் சீர்குலைவு நகைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிவது கடினம்.மேலும், 20 ஆம் நூற்றாண்டின் குத்துவிளக்கு உற்சாகமான டக் மல்லோவின் நவீன கண்டுபிடிப்பானது.1960 கள் மற்றும் 1970 களில், மல்லோய் சமகால மக்கள் உடலில் குத்திக்கொண்டிருந்தார். அது வரலாற்றின் காப்புரிமையை அளித்தது. அவரது துண்டு பிரசுரம் உடல் மற்றும் பிறப்புறுப்பு துளைத்தல் ஆகியவற்றில் அடங்கும். பிரஞ்சு ஆல்பர்ட் தனது பெயரை பகிர்ந்துகொள்கிற கருத்தை இளவரசர் ஆல்பர்ட் கண்டுபிடித்தார் என்ற கருத்தை முன்வைத்தார். இறுக்கமான காற்சட்டையில் அவரது ஆண்குறியின் தோற்றத்தை குறைப்பதற்காக மற்றும் ரோமன் செஞ்சுரியன் துளையிடல் முறை இருந்தது.மல்லோவின் தொன்மங்கள் சிலவற்றில் பின்னர் வெளியிடப்பட்ட பதிப்புகளில் உண்மையில் மறுபதிப்பு செய்யப்பட்டன.

வழிமுறைகள்தொகு

மேலைநாடுகளில் உடல் துளையிடுதல் அழகுக்காகவும் அழகு கலைக்காகவும் அம்மக்கள் இதை செய்கின்றனர்.

 • மூக்கை துளையிடுதல்
 • காதை துளையிடுதல்
 • நாவை துளையிடுதல்
 • மேல் உதடு துளையிடுதல்
 • கீழ் உதடு துளையிடுதல்
 • தொப்புளை துளையிடுதல்
 • மார்பக துளையிடுதல்

பழங்குடிகள் மற்றும் உடலை துளையிடுதல்தொகு

 
பாரம்பரிய காது வளையத்துடன் பர்மாவில் இருந்து கரேன் பெண்
 
ஒரு நைல் முர்சிய பெண்

ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் சில பழங்குடி கலாச்சாரங்களில் வரலாற்று ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டது உதடு குத்திக்கொள்வது மற்றும் உதடு நீள்வது ஆகும். துளையிடப்பட்ட உதடு, உதடு குத்திக்கொள்வது மற்றும் உதடு நீள்வது பாப்புவா நியூ கினி மற்றும் அமேசான் ஏரி ஆகிய இடத்தில் வாழும் மக்கள் கலாச்சாரம் ஆகும். அஸ்டெக்குகள் மற்றும் மாயன்கள் ஆகியோர் லப்ரெட்ஸ் அணிந்திருந்தனர், அதே நேரத்தில் மாலி மற்றும் நைல் பள்ளத்தாக்கின் ந்யூபா[3] ஆகியோர் வளையங்களை அணிந்திருந்தனர். அவற்றை குத்திக்கொண்டு பழக்கவழக்கங்கள் செய்து, தட்டுகள் அல்லது செருகிகளை நுழைத்து, கொலம்பியாவுக்கு முந்தைய மெசோமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலும் பசிபிக் வடமேற்கு மற்றும் ஆபிரிக்காவின் சில பழங்குடியினரிடையேயும் உதவியது. மலாவியின் சில பகுதிகளிலிருந்தும், பெண்கள் தங்கள் உதடுகளை அலங்கரிக்கும் ஒரு உதடு வட்டுடன் "பெல்லிள்" என்றழைக்கப்படுவது மிகவும் பொதுவானது, குழந்தை பருவத்திலிருந்து படிப்படியாக விரிவடைவதன் மூலம் விட்டம் பல அங்குலங்கள் அடையலாம் மற்றும் இறுதியில் தாடையின் மறைவை மாற்றும். அத்தகைய உதடு இன்னும் சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. நைல் பள்ளத்தாக்கின் நைல் முர்சி பழங்குடியினரின் பெண்கள், 15 சென்டிமீட்டர் (5.9 அங்குலம்) விட்டம் கொண்டிருக்கும் நேரத்தில், உதடு வளையங்களை அணியலாம்.சில முந்தைய கொலம்பிய மற்றும் வட அமெரிக்க கலாச்சாரங்களில், லப்ரெட்ஸ் ஒரு நிலை சின்னமாக காணப்பட்டன. ஹெய்டா பெண்களில் மிக உயர்ந்த நிலையின் அடையாள சின்னமாக அவர்கள் இருந்தனர், ஆனால் மேற்கத்திய பாதிப்பினால் காரணமாக அவர்கள் அணிந்திருந்த நடைமுறை இறந்து போனது. ஆல்டெக், ஓல்மேக் மற்றும் மாயன் கலாச்சாரங்கள் சடங்கு சின்னமாக நாக்கு குத்திக்கொண்டிருந்தது. சுவர் ஓவியங்கள் மேயன்ஸ் ஒரு சடங்கு முன்வைக்கின்றன, இதில் பிரபுக்கள் தங்கள் நாக்கு முள்ளுகளால் துளைத்துவிடுவார்கள். மயன் தெய்வங்களுக்கான மரியாதைக்கு எரியும் தீப்பொறியில் ரத்தம் சேகரிக்கப்படும். இது ஹைடா, குவாக்கிட்ல் மற்றும் டிலிங்கிட், அதேபோல் மத்திய கிழக்கின் ஃபக்கீரும் சூஃபிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 
ஒரு பாரம்பரிய பர்மிய காது குத்து விழா

உடலை துளையிடுவதற்கான காரணம்பிழை காட்டு: The opening <ref> tag is malformed or has a bad nameதொகு

 • பரம்பரை வழக்கங்கள்
 • அழகியல்
 • பிரசித்தி பெற்ற கலாச்சாரம்
 • மூடநம்பிக்கைகள்
 • நினைவூட்டல்

பக்கவிளைவுகள்[4][5]தொகு

துளையிடுவதினால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அவைகள் முறையே

 • நீண்ட கால வலி
 • உடல் ஒவ்வாமை
 • உலோகம் அணிவதால் சிலருக்கு உலோக ஒவ்வாமை
 • தோல் ஒவ்வாமை
 • நீண்ட கால வடுக்கள்
 • சீழ்படிந்த கட்டி
 • குறுமணிகள்(கிரானுலோமா) உருவாதல்

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடலை_துளையிடுதல்&oldid=2795383" இருந்து மீள்விக்கப்பட்டது