உடல் பருமன் மருத்துவ அவசர ஊர்தி

மருத்துவ அவசர ஊர்தி

உடல் பருமன் மருத்துவ அவசர ஊர்தி (Bariatric ambulance) உடல் பருமன் அதிகமுள்ள நோயாளிகளை கொண்டு செல்ல சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓர் அவசர ஊர்தியாகும். இவை கூடுதல் அகலமான உட்புறங்களைக் கொண்டுள்ளன, மிகப் பருமனான நோயாளிகளைத் தூக்கும் வகையில் பருமனான உடல் தூக்குப் படுக்கைகள் மற்றும் சிறப்பு தூக்கும் பற்சக்கரம் ஆகிய வசதிகளையும் இவை கொண்டுள்ளன. மேலும், இவை மிகப் பெரிய நோயாளிகளையும் சுமக்கும் திறன் கொண்டவையாகும். [1] பொது மக்களில் பெரும்பாலோருக்கு உடல் பருமன் அதிகரித்து வருவதன் விளைவாக இத்தகைய அவசர ஊர்திகள் தேவைப்படுகின்றன [2][3] [4] மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 52000 ஆக இருந்தது 2016 ஆம் ஆண்டில் 520000 ஆக அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

உடல் பருமன் மருத்துவ அவசர ஊர்தி, குயின்சுலாந்து

தற்போது உடல்பருமன் மருத்துவ அவசர ஊர்திகளுக்கான தரப்படுத்தப்பட்ட எடை திறன் ஏதுமில்லை. மேலும் தொற்றுநோயியல் தேவைகளுக்கேற்பவும், மக்கள்தொகைக்கு ஏற்பவும் இத்தகைய ஊர்திகளின் தேவைகள் மாறுபடலாம். பொதுவாக தற்போது குறைந்தது 350 கிலோ எடை முதல் 450 கிலோ எடை வரையுள்ள நோயாளிகளைச் சுமக்க வடிவமைக்கப்படுகின்றன. [5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Nick Triggle (3 February 2011). "Fat patients 'prompts ambulance fleet revamp'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.
  2. "Ambulances adapted to cope with increasing number of obese patients". Daily Telegraph. 3 Feb 2011. Archived from the original on 2014-10-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.
  3. Lauren Cox (July 2, 2009). "Who Should Pay for Obese Health Care?". ABC News. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.
  4. Nick Triggle (3 February 2011). "Fat patients 'prompts ambulance fleet revamp'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.
  5. "The Developing Science Of Bariatrics". sidhil.com. 17 July 2015. Archived from the original on 2018-01-26. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.
  6. "Bariatric services". St John Ambulance (St John Ambulance). http://www.sja.org.uk/sja/what-we-do/ambulance-services/bariatric-services.aspx.