உடையான் ரெகுநாத சேதுபதி

இராமநாதபுரம் சமஸ்தான மன்னர்

உடையான் ரெகுநாத சேதுபதி அல்லது சடைக்கன் சேதுபதி என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார்.[1] ஆட்சிக்காலம் 16O1 – 1622 சில வரலாற்றாசிரியர்கள் இவரது ஆட்சித் தொடக்கமாக கி.பி. 1603 என வரைந்துள்ளனர்.) என்பவர் போகலூரில் வாழ்ந்த இராமநாதபுர சமஸ்தான மன்னர்களில் முதல் மன்னராக அறிமுகமாகுபவராவர். இவரது (அல்லது) இவரின் மூதாதையரது பூர்வீகமானது விரையாத கண்டன் என தெரியவருகிறது. இந்த மன்னரது தந்தையார் பெயரோ அல்லது இவர் சேதுபதிப் பட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதோ அறிய இயலவில்லை. இந்த மன்னர் இராமேசுவரம் திருக்கோயிலுக்கு வழங்கிய அறக்கொடைகள் பற்றிய கி.பி. 1607ஆம் ஆண்டய செப்பேட்டின்படி இவரது இயற்பெயர் திருமலை சடைக்கன் என்றும், உடையான் ரகுநாத சேதுபதி காத்தத்தேவர் என்றும் தெரியவருகிறது.

இராமநாதபுரம் நகருக்கு மேற்கே எட்டுக்கல் தொலைவில் உள்ள போகலூர் இம்மன்னரின் தலைநகராக இருந்துள்ளது. இந்த மன்னர் வழங்கிய மூன்று செப்பேடுகள் கிடைத்துள்ளன. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Sethupathi Tondaimans". The History of Tamil Nadu.
  2. எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/I. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன்". நூல். சர்மிளா பதிப்பகம். pp. 19–25. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடையான்_ரெகுநாத_சேதுபதி&oldid=2768039" இலிருந்து மீள்விக்கப்பட்டது