உட்ரோபா குகை

உட்ரோபா குகை (Utroba Cave) பல்கேரியா நாட்டின் கர்தாலி மாகாணத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய ஒரு குகை சரணாலயம் ஆகும். திரேசிய காலத்தைச் சேர்ந்த இக்குகை மனித பெண்ணுறுப்பை ஒத்திருக்கிறது.

உட்ரோபா குகை
Utroba Cave
குகை கர்ப்பப்பை
Womb Cave TanKaya BG.jpg
தாங்காயாவில் உள்ள கருப்பை குகை

வரலாறுதொகு

உட்ரோபா குகை கர்தாலியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிமு 480 ஆம் ஆண்டுக்கு முந்தையது. குகையானது குகை கர்பப்பை அல்லது கர்ப்பப்பை குகை என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் நுழைவாயில் பெண்ணின் சினைப்பையின் வடிவத்தில் உள்ளது. குகையின் உட்புறம் கர்ப்பப்பையை ஒத்திருப்பதைக் காணலாம்.[1] குகையின் நுழைவாயில் ஒரு பிளவு என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். பின்னர் அது மனிதர்களால் விரிவுபடுத்தப்பட்டது. குகையானது 3 மீட்டர் (9.8 அடி) உயரமும், 2.50 மீட்டர் (8.2 அடி) அகலமும் கொண்டதாகும். குகையின் உள்ளே 1.3 மீட்டர் (4.3 அடி) உயரம் கொண்ட மாற்றுப்பாதை செதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர் ஓவ்சரோவ், குகை மற்றும் மாற்றுப்பாதை திரேசிய காலத்தவர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்புகிறார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. Surnin, Vitaly (2013). Hieroglyphs of the Phaistos Disc: History and Full Text Translation (Volume 1 ). Rostov-on-Don: Samizdat. பக். 132. https://www.google.com/books/edition/HIEROGLYPHS_OF_THE_PHAISTOS_DISC_history/illzAgAAQBAJ?hl=en&gbpv=1&dq=womb+cave+bulgaria&pg=PA132&printsec=frontcover. பார்த்த நாள்: 17 February 2022. 
  2. "The womb – Cave". Nicodia. Nicodia. 17 February 2022 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்ரோபா_குகை&oldid=3390709" இருந்து மீள்விக்கப்பட்டது