உட் குழு
உட் குழு (Local Group) என்பது பால் வழி உட்பட பல விண்மீன் பேரடைகளைக் கொண்ட தொகுப்பாகும். இதில் குறுமீன் பேரடைகளையும் சேர்த்து 30க்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் உள்ளது. இந்த தொகுப்பின் ஈர்ப்பு மையம் பால் வழியிலோ அல்லது ஆந்திரொமேடா பேரடையிலோ உள்ளது. இதன் விட்டம் 1 கோடி ஒளியாண்டுகள் ஆகும்.[1] இந்த தொகுப்பு கன்னி விண்மீன் மீகொத்து தொகுப்பின் ஒரு பகுதியாகும்.[2]
இதில் பால் வழியும் ஆண்டிரோமடா பேரடையும் மட்டுமே பெரும் பகுதியை பெற்றுள்ளது. மற்றவை அனைத்தும் பெரும்பாலும் துணை பேரடைகளே.
இத்தொகுப்பில் உள்ளவை
தொகு- பால் வழியும் அதன் 26 துணை பேரடைகளும்,
- ஆண்டிரோமடா பேரடையும் அதன் 14 துணை பேரடைகளும்,
- முக்கோன பேரடையும் (Triangulum Galaxy) அதன் துணை பேரடையான மீன குறுமீன் பேரடையும் (Pisces Dwarf),
- மற்றும் 13 பேரடைகள்.
- இவ்வாறு மொத்தம் 57 முக்கிய பேரடைகளை அடக்கியதே உட் குழு ஆகும்.
சொடுக்கக்கூடிய படம்
தொகுவரைபடம்
தொகுமேற்கோள்
தொகு- ↑ Karachentsev, I. D.; Kashibadze, O. G. (2006). "Masses of the local group and of the M81 group estimated from distortions in the local velocity field". Astrophysics 49 (1): 3–18. doi:10.1007/s10511-006-0002-6. Bibcode: 2006Ap.....49....3K.
- ↑ R. B. Tully (1982). "The Local Supercluster". Astrophysical Journal 257: 389–422. doi:10.1086/159999. Bibcode: 1982ApJ...257..389T.