உணர்வு நரம்பணு

உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் நரம்பணுக்கள்

உணர்வு நரம்பணு (ஆங்கிலம் : Sensory neuron) என்பது உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் நரம்பணுக்களாகும்.[1][2]

நால்வகை உணர்வு நரம்பணுக்கள்

அமைவிடம்தொகு

உணர்வு நரம்பணுக்கள் பெரு மூளையின் உணர்வு பகுதியின் புறணியில் அமைந்துள்ளது. மேலும் முள்ளந்தண்டு வடம் மற்றும் முன் உணர்வு நரம்பணு திறலிலும் உள்ளது. இவைகளை உட்காவும் நரம்பு இணைக்கிறது. அதாவது தோல் மற்றும் உடலுறுப்புகளில் உள்ள உணர்வு வாங்கி (ஆங்கிலம்:Sensory receptor) மூலம் பெறப்பட்ட தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்ட உணர்வுகளை முன் உணர்வு நரம்பணு திறலுக்கு (ஆங்கிலம்:Dorsal root ganglion) எடுத்து செல்கிறது இது முதல் நிலை நரம்பு (ஆங்கிலம்:First order neuron) ஆகும். பின் இது முள்ளந்தண்டு பகுதியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. பிறகு மூளையின் கீழ் புறணி பகுதியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. இந்த நரம்பிழை இரண்டாம் நிலை நரம்பு (ஆங்கிலம்:Second order neuron) என அழைக்கப்படுகிறது. இதன் பின் இங்கிருந்து நரம்பிழைகள் பெரு மூளையின் புறணியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. இது மூன்றாம் நிலை நரம்பணு என வழங்கப்படுகிறது.(ஆங்கிலம்:Third order neuron)

உணர்வு வாங்கிகள்தொகு

உணர்வு வாங்கிகள் (ஆங்கிலம்:Sensory receptors) என்பவை உடலின் வெளிப்புற மற்றும் உட்புற உணர்வுகளை பெற்று உட்காவும் நரம்புகள் மூலம் தூண்டுதல்களை உணர்வு நரம்பணுக்களுக்கு அனுப்புகிறது. இவைகள் புற, அக உணர்வு வாங்கிகள் என இரு வைக்கப்படும்.

புற உணர்வு வாங்கிகள்தொகு

 • பார்வை
 • நுகர்வு
 • செவிப்புலன்
 • ருசியறிதல்
 • வலி
 • தொடுதல்
 • வெப்பம்
 • குளிர்ச்சி
 • அதிர்வு
 • அழுத்தம் ஆகியவற்றிக்கான உணர்வு வாங்கிகள்

அக உணர்வு வாங்கிகள்தொகு

 • இரத்தக்குழாய்
 • உடல் உள்ளுறுப்பு
 • தசை
 • உடலசைவு
 • அக வலி ஆகியவற்றிக்கான உணர்வு வாங்கிகள்[3]

மேற்கோள்கள்தொகு

 1. Parsons, Richard (2018). CGP: A-Level Biology Complete Revision & Practice. Newcastle Upon Thynde: Coordination Group Pulbishing Ltd.. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781789080261. 
 2. Purves, Dale; Augustine, George; Fitzpatrick, David; Hall, William; LaMantia, Anthony-Samuel; McNamara, James; White, Leonard (2008). Neuroscience (4 ). Sinauer Associates, Inc.. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0878936977. 
 3. Sherrington C. The Integrative Action of the Nervous System. Oxford: Oxford University Press; 1906.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வு_நரம்பணு&oldid=2749962" இருந்து மீள்விக்கப்பட்டது