உணர் சுடர்
காதுகளால் ஒலியினை உணரமுடியும். ஆனால் காதுகளால் உயர் அதிர்வெண்ணுடைய மீயொலியினை உணரமுடியாது. மீயொலிகளை உணர எளிமையானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஒரு முறை உணர் சுடர் (Sensitive flame) முறையாகும். செங்குத்தாக அமைந்த ஒரு சிறு திறப்பு (Nozzle) வழியாக அதிக அழுத்தத்தில் எரி வளிமம் செலுத்தப்பட்டு, எரியுமாறு செய்தால், அழுத்தத்தினைப் பொறுத்து சுடர் உயரமாக எரியும். இந்நிலையில் மீயொலி அலைகள் சுடரின் அடிப்பகுதியில் விழுந்தால், சுடர் நிலையில்லாமல் அசையும், அதன் உயரம் குறைந்து காணப்படும். இதிலிருந்து மீயொலி அங்குள்ளதை அறியமுடியும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Stand and Burner for Sensitive Flames - Prof. W. F. Barrett
- ↑ "Les Recreations Scientifiques" - Gaston Tissandier
- ↑ "Sensitive Flames and Sound-Shadows". Popular Science.