உணவின் வழித்தடம்

உணவின் வழித்தடம் (Foodshed) என்பது ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் பகுதியிலிருந்து நுகரும் பகுதி வரையுள்ள நிலைகளைக் குறிப்பதாகும். வழித்தடம் என்பது உணவுப்பொருள் விளைவிக்கப்படும் நிலம், பயணிக்கும் பாதை, சந்தைகளைக் கடந்து, நுகர்ச்சி செய்யப்படும் பொழுது அது முடிவடைகிறது. உணவின் வழித்தடம் என்பது ஒரு சமூக-புவியியல் தொடர்புடைய செயல்பாடாகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயல்பான இணைப்பில் உட்பொதிக்கப்பட்ட மனித செயல்பாடு என விவரிக்கப்படுகிறது.[1] ஒரு உணவுவழித்தடத்திற்கு அடிப்படையாக அமைவது நீர்ப்பிடிப்பு வழித்தடமாகும். ஒரு குறிப்பிட்ட வகை நீர்ப்பாசன வசதி உடைய இடங்களில் ஒரே மாதிரியான பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இதன் மூலம், உணவுப்பொருட்களை கலப்பின சமூக மற்றும் இயற்கையான கட்டமைப்புகளாகக் கருதலாம்.[1]

குறிப்பு

தொகு
  1. 1.0 1.1 Feagan, R. (February 2007). "The place of food: mapping out the 'local' in local food systems". Progress in Human Geography 31 (1): 23–42. doi:10.1177/0309132507073527. http://phg.sagepub.com/content/31/1/23. பார்த்த நாள்: 2017-07-06. 

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவின்_வழித்தடம்&oldid=3593660" இலிருந்து மீள்விக்கப்பட்டது