உணவுச் சேர்பொருள்

உணவுச் சேர்பொருள் என்பது, வாசனையைக் கூட்டுவதற்கு அல்லது அதன் சுவை, தோற்றம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக உணவுடன் சேர்க்கப்படும் பொருட்களைக் குறிக்கும். சில சேர்பொருட்கள் பல நூற்றாண்டுகளாகவே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. உப்பிடுதல், சில வைன்களுக்கு கந்தகவீரொட்சைட்டுச் சேர்த்தல் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் வருகையுடன் இயற்கையாகக் கிடைப்பனவும், செயற்கையாகத் தயாரிக்கப்படுவனவுமான மேலும் பல சேர்பொருட்கள் அறிமுகமாயின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுச்_சேர்பொருள்&oldid=4163224" இலிருந்து மீள்விக்கப்பட்டது