உணவுத் தொழிற்சாலை

உணவுத் தொழிற்சாலை என்பது பெரும்பான்மையான உலக மக்கள் தொகையினர் உட்கொள்ளத் தேவையான உணவினை வழங்க பல்வேறு வகைப்பட்ட தொழில்களை உள்ளடக்கிய ஒரு கூட்டுத் தொழில் முயற்சியாகும்.உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளும், உணவுப் பொருட்களை சேகரம் செய்பவர்களும் தற்கால உணவுத் தொழிற்சாலையின் எல்லைக்குள் வருவதில்லை.

ஒரு அமெரிக்க மளிகை கடையுல் உணவுப் பொருள்களின் தொகுப்பு
ஒரு நவீன பாலாடைக்கட்டித் தொழிற்சாலை
பிரேசிலில் ஒரு கோழிப்பண்ணையில் கூண்டில் வளர்கப்படும் கோழிகள்.

உணவுத் தொழிற்சாலையின் எல்லை பின்வருமாறு அமைந்துள்ளது

தொகு
  • விவசாயம்: பயிர்கள் வளர்த்தல்,கடல் உணவு சேகரித்தல் மற்றும் உயிரினங்களை வளர்த்தல்
  • உற்பத்தி: வேதி விவசாயப் பொருட்கள்,வேளாண் சாதனங்கள் விநியோகம் மற்றும் விதைகள் போன்றவை.
  • உணவுப் பதப்படுத்தல்: சந்தையில் வியாபாரம் செய்யும் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் நேரிடையாய் உட்கொள்ளத்தக்க உணவுப் பொருட்களை தயாரித்தல்.
  • வணிகச் சந்தை: பால் பொருட்களின் விளம்பரம், புதிய உணவு பொருட்களின் விளம்பரம், வணிகம் சார்ந்த பிரச்சாரம், உணவுப் பொருட்களை டப்பாவில் இடுதல், பொதுஜன தொடர்பு போன்றவை.
  • மொத்த விற்பனை மற்றும் விநியோகம்: உணவு பொருட்கள் விநியோகம், உணவுப் பொருட்களை ஒரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லுதல், பண்டகசாலை பராமரிப்பு.
  • உணவுச் சேவை: சமையல் தொழில் உள்ளடங்கியது. மளிகைப்பொருட்கள், விவசாயிகளின் சந்தை,பொதுச்சந்தை மற்றும் சில்லறை வணிகம்.
  • முறைப்படுத்துதல்: உணவு பொருட்கள் உற்பத்தி விநியோகம்,உணவுத்தரம்,உணவு பாதுகாப்பு, உணவுசந்தை, விளம்பரம் மற்றும் வியாபாரம் சார்ந்து உள்ளூர், வட்டார, உள்நாடு மற்றும் வெளிநாட்டு அளவிலான சட்டங்கள் முறைமை.
  • கல்வியியல்: படிப்பு சார்ந்த துறை, ஆலோசனை வழங்கும் துறை, தொழில் துறை.
  • ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி: உற்பத்திப் பதப்படுத்துதல்.
  • நிதி வழங்குதல்: கடன், காப்பீடு மூலம் பாதுகாத்தல்.

வரையறைகள்

தொகு

உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் சார்ந்த அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வரையறையைத் தருவது என்பது எளிதானதல்ல.உணவுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், இவ்வாறு வரையறையரைக்கிறது:

"...உணவுத் தொழிற்சாலை என்பது பயிர் பெருக்கம், உணவு உற்பத்தி, பொட்டலமிடுதல் மற்றும் வழங்குதல், மொத்த மற்றும் சில்லறை விநியோகம்,உணவு பொருட்கள் தயாரித்தல் மற்றும் நிர்வாகம் என்ற அனைத்து துறைகளும் கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது."[1]

ஐக்கிய நாடுகளின் விவசாயத் துறையானது தனது பொருளாதார ஆராய்ச்சி சேவையினை மேற்கொண்டு உணவு அமைப்பு என்பதனை கீழ்க்காணூம் வகையில் விவரித்துள்ளது:

"ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்பு என்பது விவசாயிகள் மற்றும் அவர்கள் இணைந்துள்ள தொழிற்சாலைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அவ்விணைப்புகள் என்பது பயிர் பெருக்க உபகரணங்கள் தயாரிப்பவர், வேதிப்பொருட்கள் உற்பத்தியாளர் வே ளாண்பொருட்கள் விநியோகம் செய்பவர், நிதித்துறை சார்ந்த வேளாண் வேலைகளின் பலதரப்பட்ட சேவைப் பிரிவுகளில் ஈடுபடுவோர் ஆகிய பலரையும் இணைப்பதாக அமையும். இவ்விணைப்புகளில் உணவு சந்தைகளில் ஈடுபட்டுள்ள நுகர்வோர், உணவு மற்றும் நார் பதப்படுத்துவோர், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் உணவு சேவைத் தொழில் முனைவோரையும் அடங்கும்."[2]
உணவுத் தொழிற்சாலையில் பதனிடுதல், உணவுப் பரிமாற்றம், உணவுப் பொருட்களை பொட்டலமிட்டு வழங்குதல் ஆகிய படிநிலைகளை சிறு விவசாயம், பாரம்பரிய செயல்பாடுகள் விவசாயத்தினை குடும்பத் தொழிலாக செய்பவர் ஆகியோரும் அடங்குவர். அனேகமாக அனைத்து உணவுத் தொழிற்சாலைகளும் உள்ளூர் விவசாயம் மற்றும் மீன் வளம் சார்ந்ததாக அமையும்.[3]

வேளாண்மை மற்றும் பயிர் நிர்வாகம்

தொகு
 
அர்ஜென்டினாவில் ஒரு சோயாபீன்ஸ் வயல்

வேளாண்மை என்பது உணவு உற்பத்தி, பொருட்கள் பாதுகாத்தல், நார் பொருட்கள் உருவாக்கம், விட்டு விலங்குகள் வளர்த்தல் ஆகியவை  விவசாயம் நடைமுறையில் "பண்ணை" என்றும் அழைக்கப்படுகிறது. விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வேளாண் முறைகள் மற்றும் கருவிகள் மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் மற்றவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. உலகில் 3 பேரில் 1 பேர் வேளாண்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,[4] ஆனால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மட்டுமே வேளாண்மையின் பங்களிப்பு உள்ளது.[5]

பயிர் நிர்வாகத்தில் தாவர மரபியல், தாவர அமைப்பியல், மண் ஆராய்ச்சி மற்றும் வானிலை ஆராய்ச்சியியல் ஈடுபடுதல் ஆகிய பகுதிகளின் வேலைகளை உள்ளடக்கிய அறிவியலின் கலவை வேளாண்மை என்பது ஆகும். இன்று விவசாயிகள் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வது, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உருவாக்குதல், பயிர் பெருக்க முறைகள் சூழ்நிலையினை மேம்படுத்தும் பொருட்டும், தாவரங்களில் இருந்து ஆற்றலைப் பெறும் வழி வகைகளையும் கண்டறிய இன்றைய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.[6]

உணவு பதப்படுத்துதல்

தொகு
 
பல்பொருள் அங்காடியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதனிடப்படாத உணவுப் பொருட்களை மனிதர்கள் உடனடியாக உட்கொள்ளும் வகையில் பயனுள்ள உணவுப் பதார்த்தங்களாக மாற்றும் முறைகளும் உத்திகளும் உணவுப் பதப்படுத்துதல் எனப்படும். உணவுப் பதப்படுத்துதலுக்கு பொருள்கள் மற்றும் தூய அறுவடை செய்யப்பட்ட பொருட்கள்,கொட்டைகள்,தானியங்கள் இறைச்சிக்காக வெட்டப்படும் மாமிசங்கள் ஆகியவை பயன்படுத்தப்படும். பதப்படுத்துதலில் பல வகைகள் உள்ளன.

மேற்கோள்

தொகு
  1. "Industry". Food Standards Agency (UK). Archived from the original on 2012-06-05. பார்க்கப்பட்ட நாள் 2017-06-12.
  2. "Food market structures: Overview". Economic Research Service (USDA).
  3. Parmeggiani, Lougi. Encyclopædia of Occupational Health and Safety (3rd ed.). p. 2538. அமேசான் தர அடையாள எண் B00E1WQZ9S.
  4. "Labour" (PDF). FAO.org. The Food and Agriculture Organization of the United Nations. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015.
  5. "Macroeconomy" (PDF). FAO.org. The Food and Agriculture Organization of the United Nations. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015.
  6. "I'm An Agronomist!". Imanagronomist.net. Archived from the original on 2017-11-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுத்_தொழிற்சாலை&oldid=3723907" இலிருந்து மீள்விக்கப்பட்டது