உண்டியல் பணம் அனுப்பும் முறை

உண்டியல் பணம் அனுப்பும் முறை என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு பணத்தை அனுப்ப தெற்காசியர்கள் பயன்படுத்தும் ஒரு முறை ஆகும். குறிப்பாக புகலிட நாடுகளில் இருந்து தாயகப் பகுதிகளுக்கு சட்டத்திற்குப் புறம்பான வழியில் (ஹவாலா) பணம் அனுப்புவதை குறிக்கிறது.

முறை

தொகு

பணம் அனுப்ப விரும்பும் ஒருவர் அவருக்கு அருகாமையில் இருக்கும் பணம் அனுப்பும் நிறுவனம் அல்லது முகவரிடம் செல்வார். பெரும்பாலும் அவர்கள் சமூகத்தில் அறியப்பட்டவர்களாக, நம்பிக்கை வாய்ந்தவர்களாக இருப்பர். அவர் தான் அனுப்ப விரும்பும் தொகையையும், அனுப்ப விரும்பும் நபரின் தொடர்புகளையும் வழங்குவார். அன்றைய பண மாற்று விகிதத்துக்கு ஏற்ப எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்று பற்றுச்சீட்டு அல்லது உறுதி வழங்கப்படும். இந்தச் சேவைக்கு ஒரு கட்டணம் வசூலிக்கபடும். இந்த நிறுவனத்தின் கிளை அல்லது முகவர் அனுப்பப்பட வேண்டியவருக்கு அருகாமையில் இருப்பார். அவர்கள் சென்று பணத்தை உரியவருக்கு வழங்குவர்.

நன்மைகள்

தொகு
  • பெரும்பாலும், உண்டியல் முறையில் பணம் அனுப்ப வங்கிகளிலும் பார்க்க குறைந்த செலவு எடுக்கும்.
  • வங்கிகளை விட வேகமாகப் பணம் உரியவருக்கு அனுப்பப்படும்.
  • நாணய மாற்று விகிதம் வங்கிகளில் கிடைப்பதைவிட அதிகமாக இருக்கும்.
  • சிலசமயங்களில் வீட்டிற்கே வந்து பணப்பட்டுவாடா செய்யப்படும்.

தீமைகள்

தொகு
  • தீவிரவாதச் செயல்களைச் செய்வதற்கான நிதி இவ்வழிகளின் மூலம் நடைபெறுகிறது.[1]
  • இந்தப் பணப்பறிமாற்றம் அரசு நிறுவனங்கள் அல்லாது அங்கீகாரம் பெறாத நிறுவங்கள் வழியாக நடைபெறுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
  • வாடிக்கையாளர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

உசாத்துணைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு