உதட்டுச் செதில்கள்
வாய் திறப்பின் ஓரத்தில் ஊர்வனவற்றிற்கு உள்ள செதில்கள்
உதட்டுச் செதில்கள் (Labial scale) எனும் செதில்கள் வாயுறுப்பினைச் சுற்றி பாம்பு மற்றும் செதிலூரிகள் ஊர்வனவற்றில் காணப்படும் செதில்கள் ஆகும். மேல் மற்றும் கீழ் தாடைகளில் மையத்தில் காணப்படும் செதில்கள் இதில் அடங்காது.[1] லேபியல் என்ற சொல் லேபியம் எனும் இலத்தீன் மொழியில் "உதடு") என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் உதடு என்பதைக் குறிக்கிறது. பாம்புகளில், இரண்டு வெவ்வேறு வகையான உதட்டுச் செதில்கள் உள்ளன. உதட்டு மேல் செதில்கள் மற்றும் உதட்டுக் கீழ் செதில்கள். இந்த செதில்களின் எண்ணிக்கை, வடிவம் மற்றும் அளவு சிற்றினங்களுக்கிடையே வேறுபடுகின்றன.
உதட்டுச் செதில்களில் இரண்டு வெவ்வேறு வகைகள் உள்ளன:[1]
- மேல் உதட்டுச் செதில்கள்: மேல் உதட்டினை உருவாக்கும் செதில்கள். இவை மேலுதடு என்றும் அழைக்கப்படுகிறது
- கீழ் உதட்டுச் செதில்கள்: கீழ் உதட்டின் ஒரு பகுதியை உருவாக்கும் செதில்கள். இது கீழுதடு என்றும் அழைக்கப்படுகிறது
தொடர்புடைய செதில்கள்
தொகு- நாசி செதில்கள்: வாய் திறப்பின் எல்லையில் உள்ள மூக்கின் நுனியின் நடுச் செதில்கள்
- கீழ்த்தடை நடுச் செதில்: கீழ் தாடையின் நுனியில் நடுவிலுள்ள செதில்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Wright AH, Wright AA. 1957. Handbook of Snakes. Comstock Publishing Associates (7th printing, 1985). 1105 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-0463-0.