உதட்டுப் புற்றுநோய்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உதட்டுப் புற்றுநோய்( cancer of the lip )
இந்நோய் உதடுகளில் தோன்றுகிறது.இந்நோய் கழுத்து மற்றும் தலைப்பகுதி புற்றுடன் சேர்த்தே ஆராயப்படுகிறது.
காரணம்- தொடர்ந்து அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பது,புகையிலையயினை நிரம்ப்ப் பயன்படுத்துவது,மிகை மதுப் பழக்கம்,மனித பாப்பிலோமா வைரசு,ஆண்களாக 40 வயதைத் தாண்டி இருப்பதும் நோய் வர காரணங்களாகும்.வாய் புற்றில் 15% வரை உதட்டுப் புற்றாக உள்ளது.எனவே இது அரிதாக க்காணப்படும் நோய் அன்று. மருத்துவம்- தொடக்க நிலையில் நொய் வெளியே தெரிவதில்லை.உதட்டில் ஆறாத புண் இருப்பதே ஓர் அறிகுறியாகும்.பெரும்பாலும் கீழ் உதட்டில்தான் நோய் காணப்படுகிறது.தட்டை உயிரணுக்களால் ஆனது.தொடக்க நிலையில் கண்டு கொண்டால் முழு குணம் பெறலாம்.அறுவை மருத்துவமும் கதிர் மருத்துவமும் நல்ல பயனைக் கொடுக்கின்றன.நோய் முற்றிய நிலையில் கூடவே வேதி மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. நோய் பெரிதாக வளர்ந்து உடலின் செயல்பாடுகளில்சிக்கல் தோன்றும் போதுஅவசரச் சிகிச்சைத் தேவைப்படலாம்.இது குறைந்த அளவே.வேதி மருந்துகள் குருதி வெள்ளை அணுக்களை வெகுவாகக் குறைக்கலாம்.இதன் காரணமாக தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.இந்நிலையில் மருத்துவரின் கவனிப்புக் கட்டாயம் தேவை.இந்நிலையில் 101 டிகிரி உடல் வெப்பநிலை இருக்கும்.இரத்தம் வடிதல்,நினைவாற்றலில் சரிவு,விரைந்த இதயத் துடிப்பு,தளர்ச்சிமுதலிய அறிகுறிகள் இருக்கும்.அதிக கவனம் தேவைப்படும். எளிதாக உணவு உண்ண முடியாத நிலையும் நீர் அருந்த முடியாத நிலையும் ஏற்படலாம்.சீழ் வடிதல்,எளிதில் இரத்தம் வடிதல்,உதட்டில் கட்டி போன்றவை நோய் மிகவும் முற்றிய நிலையினைக் காட்டும்.உதடு கட்டியாகவும் நிறம் மாறியும் இருக்கும். பிற உறுப்புகளில் தோன்றும் புற்று அரிதாகவே உதட்டில் பரவும். ஆரம்ப நிலையில் 100% அறுவை மருத்துவமே நல்ல பலனைக் கொடுக்கிறது. புற்றுநோய் மருத்துவரைக் கண்டு உங்கள் நோய்பற்றி கலந்து உரையாடினால் நோய்பற்றிய தெளிவும் நல்ல பயனும் கிடைக்கும்.
பார்வை-சாலியர் குரல் இதழ்