உதவி:ஆக்குநர்சுட்டு
இந்த உதவிப் பக்கம் ஆக்குநர்சுட்டு அளித்தலைப் பற்றி விளக்குகிறது.
விக்கிப்பீடியா உரையை மொழிபெயர்க்கும் போது
தொகுவிக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் யாவும் படைப்பாக்கப் பொதுமங்கள் பகிர்வுரிமம் ஆக்குநர்சுட்டு 3.0 என்ற உரிமத்தின் கீழ் கிடைக்கின்றன. இதன் படி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி விக்கிப்பீடியா உள்ளடக்கங்களை நாம் மொழிபெயர்த்து தமிழ் விக்கிப்பீடியாவிலேயே இட்டாலும் உரிய ஆக்குநர்சுட்டு (Attribution) அளிக்க வேண்டும். எனவே, இவ்வாறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் தொடங்கும் போது, தொகுப்புச் சுருக்கத்தில் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்ற குறிப்பினை இடுவது அவசியம். இதனை எவ்வாறு செய்வது என்ற எடுத்துக்காட்டுக்கு, இந்தக் கட்டுரையின் முதல் தொகுப்புச் சுருக்கத்தைப் பார்க்கவும். அது "Internet Hall of Fame பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது" என்ற குறிப்புடன் அக்கட்டுரையின் குறிப்பிட்ட பதிப்பான https://en.wikipedia.org/wiki/Special:Redirect/revision/670623768 என்பதற்கு இணைப்பு தருகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவின் இடப்பக்கப் பட்டையில் Permanent link என்று ஒரு இணைப்பு இருக்கும். அங்கு இவ்வாறு குறிப்பிட்ட கட்டுரையின் பதிப்புக்கான இணைபைப் பெற முடியும்.
விக்கிப்பீடியா படிமங்களை வெளியே பயன்படுத்தும் போது
தொகுவிக்கிப்பீடியா, விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள படிமங்களை வெளியே பயன்படுத்தும் போது உரிய முறையில் ஆக்குநர்சுட்டு அளிக்க Attribution Generator கருவி உதவும்.