உதவி:தொகுத்தல் சுருக்கம்
இப்பக்கம் சுருக்கமாக: எப்போது தொகுக்கும்போதும் உங்கள் பங்களிப்பைப் பற்றிய சிறுகுறிப்பொன்றை விட்டுச் செல்க. |
தொகுத்தல் சுருக்கம் ஓர் விக்கிப்பீடியா பக்கத்தினை தொகுத்ததிற்கான சிறு விளக்கவுரை. நீங்கள் தொகுக்கும்போது ஓர் சிறிய உரை உள்ளீட்டுப் பெட்டி "சுருக்கம்", தொகுக்கும் சாளரத்தின் கீழும் பக்கத்தைச் சேமிக்கவும் தத்தலுக்கு மேலும் இருப்பதைக் காணலாம். தொகுத்தல் சுருக்கங்கள் பக்க வரலாறு பட்டியல்களில் (அண்மைய மாற்றங்கள், பக்க வரலாறு,கவனிப்புப் பட்டியல் ) மற்றும் வேறுபாடு பக்கத்தின் மேற்பகுதியிலும் காண்பிக்கப்படும்.
தொகுத்தல் சுருக்கம் பெட்டியில் ஓர் பத்தியைத் தொகுக்கும்போது விளக்கவுரை அளிப்பது ஓர் நல்ல பழக்கமாகும். உங்கள் தொகுப்பினைக் குறித்தும் நோக்கத்தினைக் குறித்தும் பிற பயனர்கள் புரிந்து கொள்ள இது உதவி புரியும். சுருக்கப் பெட்டியில் தவறாது ஓர் சுருக்கத்தினை இட நினைவுறுத்தும் வகையில் உங்கள் விருப்பத்தேர்வுகள் பக்கத்தில் தொகுத்தல் கீற்றில் இதற்கான குறியீட்டுப் பெட்டியை தேர்வு செய்யவும்.