உதவி:புதுப் பயனர்களை வரவேற்பது எப்படி?

தமிழ் விக்கிப்பீடியாவில் இணையும் புதிய பயனர்களை வரவேற்பது வழமையான விக்கிப்பணிகளுள் ஒன்று. இவ்வரவேற்பு பணியை எப்படிச் செய்வது என்று இக்கையேடு விளக்குகிறது.

அடையாளம் காட்டாத பயனர்கள்

தொகு

சிலர், பயனர் கணக்கில் புகுபதியாமல், கட்டுரைகளில் நல்ல பங்களிப்புகளை நல்குவர். அவர்களை வரவேற்க {{subst:anonymous}}--~~~~ அல்லது {{subst:அடையாளம் காட்டாத பயனர்}}--~~~~ என்ற செய்தியை இடலாம்.

சோதனை செய்து பார்க்கும் பயனர்கள்

தொகு

சிலர், பயனர் கணக்கில் புகுபதிந்தோ பதியாமலோ, அறியாமலோ விக்கியில் சோதனை செய்து பார்க்கும் ஆர்வத்திலோ சில தொகுப்புகளைச் செய்வர். முதலில் இத்தொகுப்புகளை மீள்வித்த / நீக்கிய பிறகு, அவர்களின் பேச்சுப் பக்கத்தில் {{subst:test}}--~~~~ அல்லது {{subst:சோதனை}}--~~~~ என்ற செய்தியை இடலாம்.

புதிய பயனர் கணக்கு உருவாக்குபவர்கள்

தொகு
 

புதிய பயனர் கணக்கு உருவாக்குபவர்கள் அனைவருக்குமே {{subst:புதுப்பயனர்}}--~~~~ அல்லது {{subst:newuser}}--~~~~ என்ற செய்தியை இடலாம். புதிய பயனர் கணக்கு உருவாக்குபவர்களை அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் "புதுப் பயனர் உருவாக்கப் பதிகை" என்பதின் கீழ் காணலாம். (படம் காண்க) பல நாள் முன்பு பதிந்தவர்களையும் புதுப் பயனர் உருவாக்கப் பதிகைக்கான சிறப்புப் பக்கத்தில் காணலாம். இந்தச் சிறப்புப் பக்கத்தில் "புதிய பயனர் கணக்கு" என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மட்டுமே தமிழ் விக்கியில் நேரடியாகப் பதிந்தவர்கள். இவர்களை மட்டும் வரவேற்றால் போதும். மற்றவர்கள் பிற விக்கிகளில் பதிந்து இங்கு தானாக கணக்கு உருவாக்கப்படுபவர்கள்.

இத்தகைய வரவேற்புச் செய்திகளை 'சிறு தொகுப்பு" என்று குறித்தால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.