உத்தரப் பிரதேச மொழிகள்

உத்திரப்பிரதேச மொழிகள் (Languages of Uttar Pradesh) இந்திய-ஆரிய மொழிகளின் இரண்டு மண்டலங்களைச் சேர்ந்தவை.

வரலாறு

தொகு

உத்தரப் பிரதேசத்தின் மொழிகள் முக்கியமாக பழைய இந்திய-ஆரிய மொழிகளின் பிரகிருதிகளிலிருந்தும், இறுதியாக சமஸ்கிருதத்திலிருந்தும் தருவிக்கப்பட்டவை.

பட்டியல்கள்

தொகு

பொதுவாக மொழியியலாளர்கள் "மொழி" , "பேச்சுவழக்கு" இரண்டையும் 'பரஸ்பர புரிந்துணர்வு' அடிப்படையில் வேறுபடுத்துகின்றனர். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதன் தனித்துவமான முறையில் இரண்டு குறிப்பிட்ட வகைப்பாடுகளைப் பயன்படுத்துகிறது: (1) 'மொழி' மற்றும் '2 தாய் மொழி'. 'தாய்மொழிகள்' ஒவ்வொரு 'மொழியிலும்' குழுவாக உள்ளன. இவ்வாறு வரையறுக்கப்பட்ட 'தாய் மொழிகள்', மொழியியல் தரநிலையில் ஒரு ’பேச்சுவழக்கு’ என்பதைக் காட்டிலும் ஒரு ’மொழி’ என்றே கருதப்படும். குறிப்பாக இது இந்தி மொழியில் அதிகாரப்பூர்வமாக குழுவாக உள்ள பல பத்தாயிரக்கணக்காக பேச்சாளர்கள் கொண்ட பல 'தாய் மொழிகளுக்கு' பொருந்தும்.

மொழிக் குடும்பங்கள்

தொகு

உத்திரப் பிரதேசத்தின் ஆதிக்கம் வாய்ந்த மொழிக் குடும்பம் இந்திய-ஆரிய மொழி குடும்பமாகும். இதில் இரண்டு முக்கிய மண்டலங்கள் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்திய-ஆரியாவின் கிழக்குப் பகுதிக்கு சொந்தமான போஜ்பூரி தவிர, எஞ்சியுள்ள மொழிகள் மத்திய மண்டலத்திற்கு சொந்தமானவை.

அதிகாரப்பூர்வ மொழிகள்

தொகு

உத்திரப்பிரதேச மாநில நிர்வாகத்தின் மொழிகள் இந்தி மற்றும் உருது ஆகும். 1951 ஆம் ஆண்டில், இந்தி உத்தரப் பிரதேச அதிகாரப்பூர்வ மொழி சட்டத்தால் நிறுவப்பட்டது; 1989 ஆம் ஆண்டு திருத்தம் மூலம் உருது நிறுவப்பட்டது.

மொழி இயக்கங்கள்

தொகு

தேவநாகரி எழுத்துக்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக 1893 ஆம் ஆண்டில் நாகரி பிரச்சாரிணி சபை உருவாக்கப்பட்டது. [1]

எழுத்து அமைப்புகள்

தொகு

அடிக்குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரப்_பிரதேச_மொழிகள்&oldid=4014359" இலிருந்து மீள்விக்கப்பட்டது