ஒரு உந்துகணை என்பது ஒரு ஏவூர்தி பொறியால் இயக்கப்படும் தானே பிலிறுந்திய, வழிகாட்டப்படாத ஆயுத முறைமை ஆகும். உந்துகணைகள் முதன்மையாக நடுத்தர மற்றும் நீண்ட தூர சேணேவி முறைமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, இருப்பினும் வரலாற்றுச்சாராக அவை வானிலிருந்து மேற்பரப்பிற்கும், சில வானிலிருந்து வானிற்கும் ஏவ பயன்படுத்தப்படுகின்றன, மேலும் மேற்பரப்பில் இருந்து வானிற்கும் ஏவும் சில எடுத்துக்காட்டுகள் கூட காணப்படுகின்றன. புத்தியல் மேற்பரப்பிலிருந்து மேற்பரப்புக்கு ஏவப்படும் உந்துகணை முறைமைகளின் எடுத்துக்காட்டுகளில் BM-27 உரகன் மற்றும் M270 பல்குழல் உந்துகணை முறைமை ஆகியவை அடங்கும்.

கட்யுசா உந்துகணை செலுத்தி, ஆரம்பகால புத்தியல் உந்துகணை சேணேவி ஆயுதங்களில் ஒன்றாகும்.

ஒரு உந்துகணையின் படைத்துறை பேச்சுவழக்கு ஏவுகணையிலிருந்து வேறுபடுகிறது. ஆரம்ப ஏவுகணைகள் "வழிகாட்டப்பட்ட உந்துகணைகள்" அல்லது "வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள்" என்று அழைக்கப்பட்டன. சில உந்துகணைகள் வழிகாட்டப்படாத முறைமைகளாக உருவாக்கப்பட்டு பின்னர் பஉசெமு போன்ற வழிகாட்டப்பட்ட விருத்துகளுக்கு(version) மேம்படுத்தப்பட்டன, இவை பொதுவாக ஏவுகணைகளாக மாறுவதற்கு பகரமாக "உந்துகணை" என்ற சொல்லை தக்கவைத்துக்கொள்கின்றன.[1] VA-111 சக்வல் போன்ற நீருக்கடியில் பயணிக்கும் உந்துகணைகள் அல்லது ஏவுகணைகள், அவற்றின் உந்துவிசை அமைப்பு எதுவாக இருந்தாலும் ஏவரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆரம்பகால வளர்ச்சி

தொகு

சில தோற்றமான சேணேவிகளாக உந்துகணைகளின் பயன்பாடு இடைக்கால சீனாவைச் சேர்ந்தது, அங்கு தீ அம்புகள் போன்ற கரணங்கள்(device) பயன்படுத்தப்பட்டன (பெரும்பாலும் உளவியல் ஆயுதமாக இருந்தாலும்), பின்னர் படிப்படியாக ஐரோப்பாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் பரவியது. 20 ஆம் நூற்றாண்டில் துல்லியமான உற்பத்தி முறைவழிகள் ஒப்பீட்டளவில் துல்லியமான உந்துகணைகளை சாத்தியமாக்கியபோது உந்துகணைகள் ஒரு குறிப்பிடத்தக்க ஆயுதமாக மாறியது.

இந்த உந்துகணைகள் பழந்தமிழில் 'தெறிப்பு' என்னும் சொல்லால் குறிக்கப்பட்டுள்ளன. 1940 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்ட ஒரு இலக்கியத்தில் இச்சொல்லால் உந்துகணை குறிக்கப்பட்டிருந்தது.

ஈழப்போரில் உந்துகணைகள்

தொகு

இவை புலிகளால் நான்காம் ஈழப்போரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவையெல்லாம் அவர்களின் உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டன ஆகும். ஆனால் சிறீலங்கா அரச படைகள் தரப்பில் இப்படி ஏதும் பயன்படுத்தப்படவில்லை.

புலிகளின் உந்துகணைகள்:[2]

1)பண்டிதர் 1550

தொகு

இதன் வெடியுளையில்(war head) மூன்று முனைகள் உண்டு.

புதுப்புனைந்தவர்: கேணல் சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்)

'பண்டிதர்' என்னும் பெயர்காரணம்: விடுதலைப் புலிகளின் உறுப்பினர் லெப்.கேணல். பண்டிதர் அவர்களின் நினைவாகச் சூட்டப்பெற்றது

பட்டப் பெயர்: சமாதானம்

பெயர்க்காரணம்: அதன் ஒலி மற்றும் அது தரும் தாக்கம் ஆகிய இரண்டும் இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்குமளவு சக்தியானது என்றுதான் அப்படி அழைக்கப்பட்டது.

வெடியுளை: 214 kg

வெடியுளை வகை : C4

உந்துகணை நீளம்: 14'

நெடுக்கம்: 6 km

இருப்பில் இருந்த இழுவையுடன் கூடிய ஏவுபலகைகள்: 15

நேரடி தாக்கம்: 50m சுற்றுவட்டத்தை அழிக்கும்

இந்த உந்துகணைகள் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதனை துக்கி தாணிப்பதற்கு(load) குறைந்தது இருவர் என்றாலும் வேண்டும்.. இந்த உந்துகணையை இயக்க சுமார் ஆறு பேர் தேவை. இதனை இயக்கும் இடத்தில் இயக்குபவர்கள் நிக்கமட்டார்கள், சுமார் 50 மீற்றர் துரத்தில் நின்றுதான் இயக்கவைப்பர்கள். இது இலக்கில் வீழ்ந்து வெடிக்கும் போது பாரிய ஒலி கேட்கும் ,அதன் துண்டுகள் கூட படையினரில் படத்தேவையில்லை இது வெடிக்கும் போது எழும் சத்தமே படையினரை கொன்றுவிடும் .

இந்த உந்துகணைகள் முதன் முதலில் முகமாலை முன்னரணில் உள்ள படையினர் மீதுதான் சோதித்துப் பார்க்கபட்டது . அதன் பின்னர் தான் இந்த உந்துகணையின் உற்பத்தி அதிகரிக்கபட்டு மன்னார் ,வவுனியா, மணலாறு போன்ற களமுனைகளுக்கு அனுப்பிவைக்கபட்டது.

ஆனால் சமாதானம் பின்னர் பயன்படுத்தப்படவில்லை. அவற்றை காவிச்செல்வது, செயல்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு மேலதிக போராளிகள் தேவைப்பட்டதால் முகமாலை முன்னரங்கு பகுதி சண்டைகளோடு உள்ளூர் விளைவிப்புக்கள் நிறுத்தப்பட்டன.

2) சண்டியன்

தொகு

சமாதனம் போன்று இது படையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் படையினர் இதன் பெயரை சொல்லி அச்சப்படும் அளவிற்கு இதன் தாக்கம் இருந்தது. இந்த உந்துகணை முதன்முதலாக 2000 ஆண்டு 3ஆம் மாதமளவில் சாளஸ் அன்ரனி அவர்களால் முல்லை சாலைத் தளத்தில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக உறுதிசெய்யப்பட்டது.

புதுப்புனைந்தவர்: கேணல் சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்)

உந்துகணை நீளம்: 4'

நெடுக்கம்: <15 km

வெடியுளை: 65 kg

வெடியுளை வகை : C4

தாக்க சுற்றுவட்டம் : 800m

இருப்பில் இருந்த இழுவையுடன் கூடிய ஏவுபலகைகள்: 8

மேற்கோள்கள்

தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்துகணை&oldid=4106409" இலிருந்து மீள்விக்கப்பட்டது