உபதேச காண்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உபதேச காண்டம் என்னும் பெயரில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இருவேறு புலவர்கள் தமிழில் இரண்டு நூல் செய்துள்ளனர். இவர்கள் சைவத் துறவிகள். சைவத் துறவிகளை அக்காலத்தில் பண்டாரம் என்றனர். வடமொழி ‘சங்கர சங்கிதை’ என்னும் நூலில் ‘சிவரகசிய காண்டம்’ என்னும் பகுதி ஏழு காண்டமாக உள்ளது. இது 13000 கிரந்தங்களைக் (ஒற்று நீக்கி எண்ணப்பட்ட எழுத்துக்களைக்) கொண்டது. இவற்றைத் தமிழாகப் பண்ணிய பாட்டு 13221. கந்தபுராணம் அவையடக்கம் பாடல் 19 இந்தப் பாட்டுநூல் கந்தபுராணம். இதில் வடமொழி நூலின் ஆறு காண்டங்களில் உள்ள செய்திகள் கூறப்பட்டுள்ளன. இதன் ஏழாவது காண்டமாக அமைந்த நூல் உபதேச காண்டம். உபதேச காண்டம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. அவற்றைப் பாடியோர் இருவர்.
- கோனேரியப்பர் (முன்னவர்)
- ஞானவரோதயர் (பின்னவர்)
இரண்டு நூல்களிலும் உள்ள அத்தியாயங்களின் தலைப்புகளால் இந்த நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை நாம் உணரமுடியும்.
|
|
|
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005