உபய வேதாந்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உபய வேதாந்தம் அல்லது ஸ்ரீவைஷ்ணவம் என்பது ஆழ்வார்கள் பாசுரங்களின் முடிவும் வேதங்களின் முடிவும் ஒன்றே எனும் வைணவக் கொள்கை ஆகும். சமசுகிருதம் மட்டுமே கோவில்களில் வழிபாட்டு மொழியாக இருந்த நிலையில் வேதாந்த தேசிகர் காலத்தில் ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும் வேதங்களைப் பாடும் அதே மெட்டில் பாடும் படி செய்யப்பட்டன. இதனால் வேதாந்த தேசிகர் உபயவேதாந்தாச்சாரியார் என்றும் அறியப்படுகிறார்.