உபேந்தர் கவுர் அலுவாலியா
உபேந்தர் கவுர் அலுவாலியா (Upinder Kaur Ahluwalia) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சண்டிகர் முந்நகரத்தின் ஓர் பகுதியான பஞ்ச்குலாவின் முதல் பெண் மாநகரத்தந்தை ஆவார்.[1][2]
மாண்புமிகு உபேந்தர் கவுர் அலுவாலியா Upinder Kaur Ahluwalia | |
---|---|
மாநகரத்தந்தை பஞ்ச்குலா மாநகராட்சி | |
பதவியில் 2013–2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | பஞ்ச்குலா, அரியானா |
தொழில்
தொகுஅரசியல்வாதியான அலுவாலியா, 2013இல் பஞ்ச்குலா மாநகரத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] இவர் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டில் மாநில அரசும் காங்கிரசு கட்சியாக இருந்ததால், தனது ஆரம்ப காலப்பகுதியில் பஞ்சகுலாவில் முன்னேற்றத் திட்டங்களை எளிதாகச் செயல்படுத்தினார். ஆனால் 2014 தேர்தல்களில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், பாஜக தலைமையிலான அரசாங்கம் நிதிப் பற்றாக்குறை காரணமாக அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது.
நிதிப் பற்றாக்குறை காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்ட பின்னர், மாநகராட்சியைக் கலைப்பதற்கான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாலை புனரமைப்பு, உணவு மற்றும் நிர்வகிக்கப்படும் பிற பணிகளை எம்.சி.பி. மூலம் நிர்வகித்தது.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Saini, Manveer (5 July 2013). "Upinder Walia is 1st mayor of Panchkula MC". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
- ↑ "Ahluwalia is Panchkula's first woman Mayor". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
- ↑ 3.0 3.1 "Politicking beat out development in Panchkula Municipal Corporation - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-28.
- ↑ "Mayor asks CM to 'Punish MC officers for boycotting House' - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-28.
- ↑ "Haryana cabinet okays bifurcation of Panchkula MC; Kalka, Pinjore to have separate council". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-07-06. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.