கருவாடு

(உப்புக் கருவாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருவாடு (ஒலிப்பு) (Dried fish) என்பது உப்பு தடவப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்ட மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைக் குறிக்கும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்கள் நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால், இவற்றைக் கடலில் இருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்று உணவிற்காக விற்பனை செய்ய முடிகிறது.

ஜப்பான் நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கருவாடு வகைகள்

விளக்கம்

தொகு

மீன்பிடித் தொழிலில் பிடித்த மீன்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க சில வழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலொழிய இவை விரைவாக கெட்டுப்போகின்றன. உலர்த்துதல் என்பது உணவைப் பாதுகாக்கும் ஒரு முறையாகும். இம்முறையில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் உணவிலிருந்து தண்ணீரை அகற்றுவதன் இம்முறை செயல்படுத்தப்படுகிறது. சூரியஒளி மற்றும் காற்றைப் பயன்படுத்தி திறந்த வெளியில் உணவுப் பொருட்களை உலர்த்துவது பழங்காலத்திலிருந்தே உணவைப் பாதுகாக்கும் நடைமுறையாக உள்ளது.[1] நீர் பொதுவாக ஆவியாதல் (காற்றில் உலர்த்துதல், வெயிலில் உலர்த்துதல், புகைத்தல்) மூலம் அகற்றப்படுகிறது. ஆனால் உறைதல்-உலர்த்துதல் விடயத்தில், உணவு முதலில் உறைந்து பின்னர் பதங்கமாதல் மூலம் நீர் அகற்றப்படும். பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூசணங்கள் வளர உணவில் உள்ள நீர் தேவைப்படுகிறது. மேலும் உலர்த்துவதால் உணவில் இத்தகைய உயிரிகள் உயிர்வாழ்வது தடுக்கப்படுகிறது.

மீன்கள், உலர்த்துதல், புகைத்தல் மற்றும் உப்பிடல் போன்ற பாரம்பரிய முறைகள் மூலம் பாதுகாக்கப்படுகிறது.[2] மீன்களைப் பாதுகாப்பதற்கான பழமையான பாரம்பரிய வழி காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் உலர வைப்பதாகும். உலர்த்தப்படும் உணவானது என்பது உலகின் மிகப் பழமையான பாதுகாப்பு முறையாகும். மேலும் உலர்ந்த மீன்கள் பல ஆண்டுகளாக எவ்வித பாதிப்பின்றி உள்ளன. இம்முறை மலிவானது மற்றும் பொருத்தமான தட்பவெப்பநிலை நிலவும் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். மீனவர் மற்றும் குடும்பத்தினரால் இதனை மேற்கொள்ளலாம். இதன் விளைவாக பாதுகாக்கப்படும் மீன்கள் எளிதாக சந்தைப்படுத்தப் படுகிறது.

வகைகள்

தொகு

உப்பிடாத கருவாடு

தொகு

உப்பிடாத கருவாடு என்பது உப்பு சேர்க்காத உலர்த்தப்பட்ட மீன் ஆகும். இம்முறையில் குறிப்பாக பண்ணா மீன், குளிர்ந்த காற்றில் கடற்கரையில் மர அடுக்குகளில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தும் அடுக்குகள் மீன் நுண் தகடு என அறியப்படுகின்றன. இம்முறையில் பண்ணா மீன் அதிக அளவில் உற்பத்திச்செய்யப்படுகிறது.

கருவாட்டுக் காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Historical Origins of Food Preservation.". Accessed June 2011.
  2. Grandidier (1899), p. 521


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவாடு&oldid=3978611" இலிருந்து மீள்விக்கப்பட்டது