உப்பு விற்றல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உப்பு விற்றல் ஓர் அறிவுத்திறன் விளையாட்டு
கையில் மண்ணை அள்ளிக்கொண்டு ஒருவர் “உப்போ உப்பு” என்பார். மற்றொருவர் “எந்த ஊரு உப்பு” எனக் கேட்பார். உப்பு (மண்) வைத்திருப்பவர் “மரக்காணத்து உப்பு” என்று உப்பு விளையும் ஊரின் பெயரைச் சொல்வார். அடுத்தடுத்து "எந்த ஊரு உப்பு" என்னும்போது உப்பு விளையும் வேறு ஊர்ப் பெயர்களையும் சொல்வார்.
இலங்கை மரபு
தொகுஇலங்கையிலும் இது சிறுவர்களாலேயே ஆடப்படுகிறது. இங்கு ஒருவரை ஒருவர் தோளில் சுமப்பார். சுமக்கப்படுபவரின் கைகள் சுமப்பவரின் கழுத்தையும் கால்கள் இடுப்புப் பகுதியைச் சுற்றியும் பிடித்திருக்கும். சுமப்பவர் பின்வருமாறு பாட்டாக உப்புக் கூறி விற்பதும் வாங்குபவர் விளக்கம் கேட்பதுமாக அது இருக்கும்.
"உப்பிருக்கு உப்பு
என்ன உப்பு
சீனி உப்பு
போட்டுட்டுப் போங்க
எத்தனை றாத்தல்
அஞ்சு றாத்தல்"
இதற்கு உப்பு விற்பவர் ஐந்து முறை துள்ளுவார்.
இடையில் நாய் துரத்துவதாகவும் உப்பு விற்பவர் ஓடுவதாகவும் காட்டி இருக்கும். இங்து பொதுவாக தூக்கப்படுவர் மிகச்சிறியவராக இருப்பார். துள்ளும் போதும் ஓடும் போதும் இவர் களிப்புறுவதே முதன்மைப்படுத்தப்படும்.
பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- டாக்டர் ஏ. என். பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980