உப்பு வைத்தல்

உப்பு வைத்தல் என்பது நிலா வெளிச்சத்தில் ஆடப்படும் விளையாட்டு.

இரண்டு குழுவினர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று உப்பு என்று மணல் குவியல்களை வைப்பர். வைத்து முடிந்ததும் கால்கால் என்று கூச்சலிடுவர். அடுத்த குழுவினரும் அவ்வாறே கூச்சலிடுவர். இரு குழுவும் உத்தி இடத்துக்கு மீளும். பின் இடம் மாறிச் சென்று அடுத்த குழுவினர் வைத்த குவிழல்களை அழிப்பர். மீண்டும் கால்கால் என்று கூச்சலிடுவர். பின் எல்லாரும் கூடிச் சென்று அழிக்கப்படாத உப்புக் குவியல்களை எண்ணுவர். எந்தக் குழுவினரின் குவியல்கள் அழிக்கப்படாமல் அதிகமாக இருக்கின்றனவோ, அந்தக் குழுவினர் வென்றவர்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் 627 716, 1982
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பு_வைத்தல்&oldid=4163260" இலிருந்து மீள்விக்கப்பட்டது