உமறுப் புலவர் விருது
உமறுப் புலவர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் தமிழறிஞர் ஒருவருக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பெற்று வருகிறது.[1] இந்த விருதுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
விருது பெற்றவர்கள் பட்டியல்
தொகுவரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
1 | முனைவர் சேமுமு.முகமதலி | 2014 |
2 | மு.சாயபு மரைக்காயர் | 2015 |
3 | முனைவர் தி.மு. அப்துல் காதர் | 2016 |
4 | ஹாஜி எம்.முகம்மது யூசுப் | 2017 |
5 | பேராசிரியர் சா. நசிமா பானு | 2018 |
6 | லியாகத் அலிகான் | 2019 |
7 | ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன் | 2020 |
8 | நா. மம்மது | 2021 |
9 | முனைவர் பீ. மு. அஜ்மல்கான் [2] | 2022 |
10 | தா.சையது காதர் ஹீசைன் [3],[4] | 2023 |
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.5.2013 ஆம் நாள் சமர்பித்த அறிக்கை
- ↑ "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
- ↑ "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
- ↑ "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.
புற இணைப்புகள்
தொகு- உமறுப் புலவர் விருது பெற்றவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம்