உமாமகேசுவர விரதம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உமாமகேசுவர விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. கார்த்திகை மாத பூரணை நாளில் மேற்கொள்ளப்படும் விரதமாகும். உமாமகேசுவர மூர்த்தியைக் குறித்து மேற்கொள்ளப்படுவதால், உமாமகேசுவர விரதம் எனப் பெயர் பெற்றது. இந்நாளில் உணவை விடுத்தேனும் குறைத்தேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் உமாமகேசுவரரை விதிப்படி வழிபடுவர்.