உம்மதாட்டு

உம்மதாட்டு என்பது கருநாடகத்தின் கலைகளில் ஒன்று. இதை கொடவ இனத்துப் பெண்கள் நிகழ்த்துவர். இவர்கள் கருநாடகத்தின் குடகு பகுதியில் வாழ்கின்றனர். தங்களுடைய பாரம்பரிய ஆடைகளையும், நகைகளையும் அணிந்திருப்பர். மரத்தாலான விளக்குகளைச் சுற்றி, வட்டவடிவில் கூடி நின்று, ஆடுவர். வட்டத்தின் நடுவில், நீர்க் குடத்தை கையில் வைத்திருப்பாண் ஒரு பெண். நடுவில் நிற்கும் பெண், காவிரித்தாயைக் குறிக்கிறது. ஆடும்போது காவிரி வரலாற்றைப் பற்றிய பாடலைப் பாடுவர். பாடல் வரிகளுக்கு ஏற்ப தாளம், இசை வேறுபாடு இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மதாட்டு&oldid=2095819" இருந்து மீள்விக்கப்பட்டது