உயர்நிலைப் பள்ளி (தமிழ்நாடு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாட்டில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்றவை உள்ளன. இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள பாடப்பிரிவுகளுக்கும், இளநிலைப் பட்டத்துடன் கல்வியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப்பிரிவுகளுக்கேற்ப பணியமர்த்தப்பட்டுள்ளனர்.