உயர்ந்த குங்கிலியம்

பரங்கிச் சாம்பிராணி (Boswellia carteri) என்பது வழிபாட்டு நறுமணப்பொருள் ஆகும். இது சாலா எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்த தாவர மரப்பட்டைப் பிசினைச் சுட்டு உருவாக்கப்படுகிறது.

போசுவெல்லியா கார்டிரி

வகைப்பாடு

தொகு
 
போஸ்வெல்லியா கார்டிரி வாசனைப் பொருள்

தாவரவியல் பெயர்: போசுவெல்லியா கார்டிரி (Boswellia carteri அல்லது Boswellia sacra)

குடும்பம்: பார்சிரேசியீ (Burseraceae)

இதரப் பெயர்கள் : சாலா, பரங்கிச் சாம்பிராணி

தாவரத்தின் அமைவு

தொகு

இம்மரம் 10 முதல் 20 அடி உயரம் வளரக் கூடியது. இதன் மரப்பகுதி சிவப்பாக இருக்கும். இம்மரத்தில் வெள்ளை நிற பூக்கள் மலர்கின்றன. இம்மரத்தின் பட்டையிலிருந்து வாசனையுடன் கூடிய பிசின் வருகிறது. இது மினுமினுப்பாக இருக்கும். இதைச் சுடவைத்து குங்கிலியம் எடுக்கிறார்கள். உலகில் உள்ள எகிப்திய, கிரேக்க, ரோமானிய, யூத, சீன, பாரசீக, கிறிஸ்துவ, இந்து ஆகிய பல சமயங்களிலும் குங்கிலியத்தை தமது தெய்வ வழிபாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள். இதைச் சாம்பிராணி போல் தூபம் போடுகிறார்கள். நறுமணத்துடன் புகையும் வெளிவருகிறது. இதன் புகை முச்சுயிர்ப்பு நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

உலகின் மிகச் சிறந்த தூபம் போடும் உயர்ந்த குங்கிலியம் இந்த மரத்திலிருந்தே கிடைக்கிறது.

காணப்படும் பகுதிகள்

தொகு

இம்மரம் தென் ஆப்பிரிக்கா, சோமாலியா, இந்தியாவில் வளர்கிறது.


மேற்கோள்

தொகு

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்ந்த_குங்கிலியம்&oldid=3723143" இலிருந்து மீள்விக்கப்பட்டது