உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர்கள்

உயர் ஆற்றல் எக்சு-கதிர்கள் (High-energy X-rays) மிகவும் வலிமையான எக்சு-கதிர் ஆகும். வழக்கமான ஊடு கதிர்கள் (மற்றும் காம்மா கதிர் ஆற்றலை விடவும்) அதிகமான அளவு 80-1000 கி இலத்திரன்வோல்ட் (1 மி இலத்திரன்வோல்ட்) 120 கிஇலத்திரன்வோல்ட்) ஆற்றல் கொண்டவையாகும். இவை ஐரோப்பிய சின்க்ரோட்ரோன் கதிர்வீச்சு வசதியில் கற்றை வரிசை அடையாள எண் 15 போன்ற நவீன சின்க்ரோட்ரோன் கதிர்வீச்சு மூலங்களால் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைக் கதிர்களின் முக்கிய நன்மை என்னவென்றால், இக்கதிர்கள் பொருள்களில் ஆழமாக ஊடுருவி, இயற்பியல் மற்றும் பொருளறிவியலில் அதிக தடிமனான மாதிரிகளுக்கு ஒரு ஆய்விற்கான சூழலை உருவாக்குகிறது மற்றும் காற்றில் மாதிரிச் சூழல் மற்றும் செயல்பாட்டை அனுமதிக்கிறது. சிதறல் கோணங்கள் மிகக்குறைவாக உள்ளதோடு முன்னோக்கி இயக்கப்பட்ட மாறுபாடானது எளிய கண்டறிதல் அமைப்புகளை அனுமதிக்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Graham A. Colditz, The SAGE Encyclopedia of Cancer and Society, SAGE Publications, 2015, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1483345742 page 1329