உயிரியல் அரை-வாழ்வு

கதிர் மருத்துவத்தில் பொருள் ஒன்றின் உயிரியல் அரை-வாழ்வு (Biological half-life, அல்லது elimination half-life) என்பது மருத்துவப் பாடத் தலைப்புகளின் வரைவிலக்கணத்தின் படி, பொருள் ஒன்று ( எடுத்துக்காட்டாக, மருந்து, கதிர்வீச்சு அணுக்கரு அல்லது வேறு பொருட்கள்) அவற்றின் மருந்தியல் சார்ந்த, உடற்செயலியல் சார்ந்த, அல்லது கதிரியக்கம் சார்ந்த அரைப்பங்கு இயல்புகளை இழக்க எடுக்கும் நேரத்தைக் குறிக்கும்.[1]

உயிரியல் அரை-வாழ்வுக் காலம் மருந்தியக்கத் தாக்கியலில் ஒரு முக்கிய குணகம் ஆகும். இது பொதுவாக t½. என்பதால் தரப்படும்.[2]

கதிரியல் துறை, அணுக்கரு மருத்துவத் துறையில் கதிரியக்கப் பொருட்களை கையாளும் இடத்தில் பணிபுரிகிறவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில சமயங்களில் கதிரியக்கப் பொருட்களை மூச்சு மூலம் அல்லது உணவு மூலம் உடலில் ஏற்க நேரிடுகிறது. ஆய்விற்காகவும் மருந்தாகவும் சில நேரங்களில் நோயாளிகளுக்குக் கொடுக்ககப்படுகிறது. இவ்வாறு உடலில் ஏற்கப்படும் பொருட்கள் சிறுநீர், வியர்வை, மூச்சுக் காற்று மற்றும் மலம் வழியாக வெளியேற்றுகிறது. ஏற்றுக்கொண்ட அளவில் பாதி அளவு, இம்முறைகளின் மூலம் குறையத் தேவைப்படும் கால அளவு உயிரியல் அரை வாழ்வு நேரம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Lin VW; Cardenas DD (2003). Spinal cord medicine. Demos Medical Publishing, LLC. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-888799-61-7.
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "biological half life". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_அரை-வாழ்வு&oldid=2495834" இலிருந்து மீள்விக்கப்பட்டது