உயிரியல் காலநிலையியல்

உயிரியல் காலநிலையியல் (Bioclimatology) என்பதூயிர்க்கோளத்துக்கும் புவியின் வளிமண்டலத்துக்கும் இடையிலான நெடுங்கால ஊடாட்ட நிகழ்வுகளைப் பற்றிய பலதுறைசார் அறிவியல் புலமாகும். இவற்ரின் குறுங்கால ஊடாட்ட நிகழ்வுகள் உயிரியல் வானிலையியல் புலத்தில் கருதப்படுகின்றன.

காலநிலை, உயிர்க்கோள ஊடாட்ட நிகழ்வுகள்

தொகு

காலநிலை நிகழ்வுகள் புவியில் வாழும் உயிரினங்கலின் பரவல், உருவளவு, இயல்புகளைப் பேறலவில் கட்டுப்படுத்துகின்றன. எடுத்துகாட்டகபுவிக்கோள அளவிலான வளிமண்டலப் பொதுச் சுழற்சி பெரிய பாலைநிலங்களின் இருப்பிடத்தையும் அடிக்கடி மழைபொழியும் வட்டாரங்களையும் பெரிதும் தீர்மானிக்கிறது. இந்நிலை இவ்வகை சுற்றுச்சூழலகளில் இயல்பாக வாழத்தகும் உயிரின்ங்களிப் பெரிதும் தீர்மானிக்கிறது. மென்மேலும், இயற்கை நிகழ்வுகளாலோ மாந்தரினச் செயல்பாடுகளாலோ ஏற்படும் காலநிலை மாற்றங்கள், இவ்வாழிடங்களை மாற்றி வட்டார உயிரினங்கள் பெருகிடவோ அழியவோ காரணமாகின்றன.

உயிர்க்கோள மொத்தப் பொருண்மையில் 99% அளவை கண்டங்களின் தாவரப் பரப்பு உள்ளடக்குகிறது. இது புவியின் வளிமண்டலத்தின் வேதியியல் உட்கூறுகளை நிறுவுவதோடு அதைக் கட்டிக்காத்தும் வருகிறது. குறிப்பக புவியின் தொடக்கநிலை வளிமண்டலப் படிமலர்ச்சியில் இது உய்யநிலை பாத்திரம் வகித்தது (காண்க புவியின் வரலாறு ). அண்மையில் புவித்தரை தாவரக் கவிப்பு வளிமண்டலத்துக்கு 60 பில்லியன் டன் கரிமத்தை ஒவ்வோராண்டும் கரிம நிலைப்பாட்டின் வழியாகவும் கரிம மூச்சுயிர்ப்பு (கரியிரு உயிரக வளிம வெளியீட்டின்) வழியாகவும் பரிமாறுகிறது. எனவே, இது கரிமச் சுழற்சி அல்லது வட்டிப்பில் உய்யநிலைப் பாத்திரம் வகிக்கிறது. புவிக்கோள முழுவதும் ஒவ்வோராண்டும் இந்த இரு நிகழ்வுகளிலும் நிலப் பயன்பாட்டாலும் ஏற்படும் சிறு சமனின்மையும் வளிமண்டலக் கரி ஈருயிரகச் செறிவைக் கூட்டிவிடுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_காலநிலையியல்&oldid=2388808" இலிருந்து மீள்விக்கப்பட்டது