உயிரியல் திரிதடையம்
உயிரியல் திரிதடையம் (ஆங்கிலம்:Biological transistor) என்பது டி.என்.ஏ. (ஆ.க.அ - ஆக்சிசனற்றயிரைபோ கரு அமிலம்) மற்றும் ஆர்.என்.ஏ (இ.க.அ - இரைபோ கரு அமிலம்) போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு திரிதடையம் போன்றதொரு கருவியாகும். 2013 இல் இதனைக் கட்டுபிடித்த பிறகு, உயிரியல் கணினிகளை தயாரிப்பதற்கான இறுதி பாகமாக இதனைக் கருதப்படுகிறது[1].
பின்புலம்
தொகுஒரு தற்கால கணினிகளுக்கு மூன்று வெவ்வேறு வல்லமைகள் தேவையாகிறது: அது தகவல்களை சேமித்தல், கணினி பாகங்களுக்கு இடையே தகவலை பரிமாற்றிக்கொள்ளல் மற்றும் ஒரு எளிய தருக்க அமைப்பைக் கொண்டிருத்தல். மார்சு 2013 இல், அறிவியலாளர்கள் புரதங்கள், ஆ.க.அ (டி.என்.ஏ.) போன்றவற்றை உள்ளடக்கிய உயிரியல் பாகங்களைப் பயன்படுத்தித் தரவுகளை சேமிப்பதையும், பரிமாற்றிக்கொள்வதையும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்[2]. அவர்கள் எளிய இரு முனைய தருக்கப் படலைகளையே நிகழ்த்திக் காட்டினர், ஆனால் பல்லடுக்கு உள்ளீடுகள் கொண்டவை தேவையது தோல் தடிப்பு சிக்கல்களினால் நடைமுறையாக்கயிலாதது ஆகும்[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.extremetech.com/extreme/152074-stanford-creates-biological-transistors-the-final-step-towards-computers-inside-living-cells
- ↑ http://io9.com/this-new-discovery-will-finally-allow-us-to-build-biolo-462867996
- ↑ Jerome Bonnet; Peter Yin; Monica E. Ortiz; Pakpoom Subsoontorn; Drew Endy (March 28, 2013). "Amplifying Genetic Logic Gates". Science.