உயிரி உணர்திறன் அமைப்புகள்
உயிரி உணர்திறன் அமைப்புகள்(biosensors) என்பவை, ஒரு உயிரியல் மூலக்கூறினை இயல்வேதி உணர்வியுடன்(physico chemical detector) இணைத்து, அதனுடன் ஒரு வேதிப்பொருள் ஏற்படுத்தும் வினை அடிப்படையில், அவ்வேதிப்பொருளின் அளவினைக் கண்டறிய உதவும் அமைப்புகளாகும்.[1]
திசுக்கள், நுண்ணுயிரிகள், உள்ளுறுப்புகள், செல் ஏற்பிகள்(cell receptors), ஆன்டிபாடிகள், நியூக்ளிக் அமிலங்கள், போன்ற நுட்பமான உயிரி மூலக்க்கூறுகளைக் கொண்டு இவை உருவாக்கப்படுகின்றன. உயிரியல் ரீதியில் நுட்பமான இத்தகைய மூலக்கூறுகளை உயிரி-பொறியியல்(Biological Engineering) மூலமாக உருவாகிட இயலுகிறது.
ஆற்றல் மாற்றிகள் அல்லது உணர்விகள் என்பவை, ஒரு வகையான குறியீட்டலைகளை(signals) மற்றொரு வகையாக மாற்ற உதவுபவையாகும். ஒளியியல், அழுத்த மின்னியல்(piezo electric), மின் வேதியியல், மின்வேதி ஒளிர்வியல்(electrochemoluminescence) போன்ற பண்புகளைச் சார்ந்து இவ்வாற்றல் மாற்றிகள் செயல்படுகின்றன. இத்தகைய உணர்திறன் அமைப்புகளுக்கு மின்னணு செயலிகள் (Electronic processor) மற்றும் குறியீட்டலை செயலிகள் அடிப்படையிலான உணர்திறன் செயல்படுத்தும் சாதனங்கள் அவசியமாக உள்ளன,[2]
உணர்திறன் அமைப்பு:
தொகுஒரு உயிரி உணர்திறன் அமைப்பானது இயல்பாகவே ஒரு உயிரி அங்கிகரிக்கும் பகுதி (bio-recognition site), உயிரி ஆற்றல் மாற்றி அமைப்பு(bio-transducer component), மற்றும் (குறியீட்டலை உயர்த்தி, செயலி, திரை இவற்றை உள்ளாடக்கிய) ஒரு மின்னணு அமைப்பு போன்ற அலகுகளைக் கொண்டதாக உள்ளது. இதில் உயிரி-ஏற்பி(bio-receptor) என்றழைக்கப்படும் அங்கிகரிக்கும் பகுதியானது நுண்ணுயிரிகளிலுள்ள உயிர்மூலக்கூறுகளை ஏற்பதன் மூலமாகவோ, அல்லது வினைபொருள்(analyte) முன்னிலையில் ஏற்படும் வேதிவினைகளின் மூலமாக உருவாகும் விளைபொருட்களை ஏற்பதன் மூலமாகவோ உணர்திறனைப் பெறுகின்றன.உயிரி உணர்திறனமைப்புகளை உருவாக்குவதற்கான முக்கிய நோக்கம் உயிரியல் மாதிரிகள் பெறப்படும்போது, முதல் நிலையிலேயே எளிதான மற்றும் வேகமான ஆய்வுக்கு மாதிரியை உட்படுத்தி அதன் தரத்தைக் கண்டறிவதாகும்.[3]
பயன்கள்:
தொகு- இரத்த சர்க்கரை அளவிடல்
- உணவுத் தர ஆய்வு
- டி ஆக்ஸி ரிபோ நியூக்ளிக் அமில உணர்திறன் அமைப்புகள்
- நுண்ணுயிரி அடிப்படையிலான உணர்திறன் அமைப்புகள்
- ஓஸோன் உணர்திறன் அமைப்புகள்
- மாற்றிட புற்றுநோய் செல் உணர்திறன் அமைப்புகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ urner, Anthony; Wilson, George; Kaube, Isao (1987). Biosensors:Fundamentals and Applications. Oxford, UK: Oxford University Press. p. 770. ISBN 0198547242.
- ↑ Cavalcanti A, Shirinzadeh B, Zhang M, Kretly LC (2008). "Nanorobot Hardware Architecture for Medical Defense" (PDF). Sensors. 8 (5): 2932–2958. doi:10.3390/s8052932. PMC 3675524. PMID 27879858.
- ↑ A. Hierlemann, H. Baltes, "CMOS-based chemical microsensors, The Analyst 128 (1), 2003, pp. 15–28.