உயிர்மெய் எழுத்துகள்

தமிழ் உயிர்மெய் எழுத்துகள் பட்டியல்

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

எடுத்துக்காட்டு:

'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

எடுத்துக்காட்டு

கீழேயுள்ள அட்டவணையில், மெய்யெழுத்து "க்", உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து, உயிர்மெய்யாகும் வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.

அமைப்பு உயிர்மெய் வடிவம் ISO 15919 IPA
க் + அ ka [kʌ]
க் + ஆ கா [kɑː]
க் + இ கி ki [ki]
க் + ஈ கீ [kiː]
க் + உ கு ku [ku], [kɯ]
க் + ஊ கூ [kuː]
க் + எ கெ ke [ke]
க் + ஏ கே [keː]
க் + ஐ கை kai [kʌj]
க் + ஒ கொ ko [ko]
க் + ஓ கோ [koː]
க் + ஔ கௌ kau [kʌʋ]

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்மெய்_எழுத்துகள்&oldid=3270388" இலிருந்து மீள்விக்கப்பட்டது