உயிர்மெய் சொல்வளம்

உயிர்மெய் சொல்வளம் தமிழ் சொல்வள ஆய்வின் ஒரு பகுதியாக தமிழின் உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்குகின்ற சொற்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். அளவியல் வழி மொழி ஆய்வு (Metrics based Ligusitic Reaserach) செய்ய இது பெரிய ஊக்கியாக இருக்கும் என்று கருதலாம். கீழுள்ள அட்டவணையில் ஒவ்வொரு உயிர்மெய்யும் உருவாக்கும் அல்லது பங்குகொள்ளும் சொற்களின் எண்ணிக்கைக் கொடுக்கப்பட்டுள்ளது.

காட்டாக, “தி” என்னும் எழுத்து, 12642 சொற்களில் பயிலுகின்றன. அதைப்போன்று “கு” 10220 சொற்களிலும், “ஞூ” 2 சொற்களிலும், “ழீ” 5 சொற்களிலும் பயிலுகின்றன. "தி" என்ற உயிர்மெய்யே தமிழில் அதிகச் சொற்களை உருவாக்குகின்றது என்பதும் சில உயிர்மெய்கள் பங்குகொள்கிற சொற்கள் அகராதியில் பங்கெடுக்காமல் இருக்கின்றன என்பதும் தெரியவருகிறது.

"தி" என்ற எழுத்து ஏன் அதிக சொற்களில் இருக்கிறதென்று ஆயப்போந்தால் "திரு" என்ற சொல்லின் உயர்வே கரணியம் என்பதும் திரு என்பதற்கு செல்வம் என்பது பொருள் என்பதோடு தமிழின் செல்வமாகவே இத் திரு என்ற சொல் இருப்பதைக் காணமுடிகிறது.

இத்தரவும் அட்டவணையும், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற இக்காலத்தில் சொல்லப் படுகிற இகர ஈகார உகர ஊகார வடிவமாற்றம் செய்யப்பட்டால் தமிழின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று அளவிட உறுதுணையாக இருந்துள்ளது[1].

உயிர்மெய் சொல்வள அட்டவணை-2007

கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ மொத்தம்
8211 4986 581 10220 1292 687 597 3604 2486 2253 132 35049
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
0 0 0 4 0 0 0 0 0 0 0 4
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
4075 6859 1196 5106 1017 2036 921 1476 731 863 3 24283
ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
322 11 8 3 2 40 6 55 3 3 1 454
டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
1615 7228 79 9068 74 107 92 3756 34 159 0 22212
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
641 2624 133 531 17 138 19 872 8 40 1 5024
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
4426 12642 1008 7190 850 713 1331 1502 892 824 1 31379
நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
2470 2215 1041 244 279 854 243 75 191 272 0 7884
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
5434 5276 506 7762 2062 1282 938 638 1600 1367 68 26933
மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
4041 2177 394 4376 1123 413 913 1479 405 430 47 15798
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
2753 1921 65 786 174 261 145 233 63 652 12 7065
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
3186 6532 412 7896 252 142 354 2095 47 596 23 21535
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
1811 3228 92 984 99 149 277 3814 63 437 3 10957
வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
5356 7105 856 2383 51 2147 1578 1459 49 141 0 21125
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
172 1768 5 1730 11 6 3 612 2 9 1 4319
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
475 2692 21 733 20 61 28 1541 12 38 0 5621
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
555 1973 11 4354 28 86 38 1412 52 68 0 8577
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
1003 2284 104 632 53 75 81 1501 16 171 0 5920
46546 71521 6512 64002 7404 9197 7564 26124 6654 8323 292 254139

குறிப்புகள்

தொகு
  1. அகர உயிர்மெய்கள் பயிலும் சொற்களை, ஒருங்குறியேற்றம் பயிலும் தேடுநிரலால் பிழையின்றி சலித்துத் தர முடியவில்லை. அதனால் அவற்றையும் கணக்கில் எடுக்கவில்லை.
  2. இந்த அட்டவணையைச் செய்ய உதவியது சிக்காகோ பல்கலைக் கழகத்தின் உதவியால் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியாகும்[2].
  3. இவ்வட்டவணையின் எண்ணு பிழை 0.5% வரை இருக்கக் கூடும்.
  4. மேற்கண்ட அகராதி 19-சூலை-2007 வரையான தரவுகளைக் கொண்டுள்ளதால் இவ்வட்டவணையின் பதிப்பும் அத்திகதியுடைத்தது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்மெய்_சொல்வளம்&oldid=1338853" இலிருந்து மீள்விக்கப்பட்டது