உரசிணைப்பி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
உரசிணைப்பி (அல்லது விடுபற்றி) (Clutch - கிளட்ச்) என்பது இன்ஜினையும் கியரையும் இணைக்கும் ஒரு சாதனமாகும். அதாவது ஆற்றல் இன்ஜினில் இருத்து உரசினி வழியேதான் கியருக்கு கடத்தப்படும். பொறியின் சில்லுகளுக்கு செலுத்தும் சக்தியை தற்காலிகமாக விடுவிக்க, மீண்டும் வழங்கவும் இது பயன்படுகிறது. இது உராய்வு மூலம் செயல்படும் அமைப்பு. பொறியில் இருந்து வரும் கிராங்க் ஷாப்ட், நேரடியாக பற்சில்லுடன் உடன் இணைந்து இருக்காது. உரசிணைப்பி வழியாகத்தான் இணைந்து இருக்கும். திடீரென்று தடுப்பி போடுகிறோம், சில்லுக்கள் சுழல்வது நின்று விடுகின்றன. ஆனால் பொறி நிற்காது. ஏன்? அப்படி நிற்கவிலலையெனில் பொறி சேதம் ஆகிவிடும். எனவேதான் உரசிணைப்பி பயன்படுத்தப்படுகிறது.
இதில் இரண்டு சொரசொரப்பான தகடுகள் ஒன்றோடு ஒன்று அழுத்தமாக பொருந்தி இருக்கும். அதன் மூலம் ஒன்றாக இணைந்து சுழலும். அதன் பிடிமானத்தை விட அதிகம் அழுத்தம் தரப்பட்டால் ஒரு முனை விடுபட்டு சுழலாமல் நிற்கும்; மறு முனை மட்டும் சுழலும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஷேக் அப்துல் காதர். "கிளட்ச் (Clutch) - பயன்பாடும், செயல்முறையும்". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2016.