உருசிய மாஃபியா

உருசிய மாஃபியா (Russian mafia, உருசியம்: ру́сская ма́фия,[1] அல்லது பிராத்வா (Bratva, братва́, 'சகோதரத்துவம்') என்பது முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருசியாவில் உருவான திட்டமிட்டு இயங்கும் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமிழைக்கும் குழுவினர் ஆவர். மாஃபியா குழுக்களில் ஏதேனும் ஒன்று "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு" எனக் குறிப்பிடப்படலாம். சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரேயே இக் குழுக்கள் பல விதங்களில் இருந்தே வந்துள்ளார்கள். பல முன்னாள் சோவியத் ஒன்றிய இராணுவ உறுப்பினர்கள் உருசிய மாஃபியாவில் இணைந்துள்ளார்கள்.

2012 இல், ஏறத்தாழ 6,000 குழுக்கள் இருந்தன,[2] இவற்றில் 200 இற்கும் மேற்பட்ட குழுக்கள் உலகளாவிய அளவில் உள்ளன. இந்த பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களாக முன்னாள் சிறை உறுப்பினர்கள், ஊழல் அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், இன உறவுகள் கொண்டவர்கள், அல்லது ஒரே இடத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் அல்லது தலைவர்கள் இருந்தனர்.[3][4] ஆகத்து 2010 இல், பிரான்சைச் சேர்ந்த குற்றவியல் நிபுணர் அலைன் பாவர் என்பவர், உருசிய மாஃபியா அவர்களின் உலகளாவிய நடவடிக்கைகளில் ஒரு பகுதி-இராணுவ நடவடிக்கையுடன் "ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறந்த கட்டமைக்கப்பட்ட குற்றவியல் அமைப்புகளில் ஒன்றாகும்" என்று கூறினார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "В Испании ликвидирована "российская мафия"". Rossiyskaya Gazeta. 16 June 2008. Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 24 October 2016.
  2. "Russian Organized Crime". fas.org. Archived from the original on 20 June 2012. பார்க்கப்பட்ட நாள் 18 July 2012.
  3. Mallory, Stephen L. Understanding Organized Crime. Jones and Bartlett Publishers, 2007, p. 73-87.
  4. "Russian mafia abroad is a myth – head of Russian Interpol bureau". Interfax.com.ua. 23 December 2009. Archived from the original on 5 July 2012. பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
  5. "Russian mafia taking over French Riviera". The Telegraph. 31 August 2010. Archived from the original on 15 August 2012. பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_மாஃபியா&oldid=4007506" இலிருந்து மீள்விக்கப்பட்டது