உருசெல் டேவிட் கிரே

நியூசிலாந்தின் மொழியியலாளர் மற்றும் பரிணாம உயிரியலாளர்

உருசெல் டேவிட் கிரே (Russell David Gray) என்பவர் ஒரு பரிணாம உயிரியலாளர் மற்றும் உளவியலாளர் ஆவார். கலாச்சார பரிணாமம் மற்றும் மனித வரலாற்றுக்கு முந்தைய கால ஆய்வுக்கு அளவாய்வு முறைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இவர் பணியாற்றி வருகிறார். நியூசிலாந்தில் அமைந்துள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் டேவிட் கிரே பேராசிரியராக பணியாற்றினார்.[1] உயிரியல் மற்றும் உளவியலில் இவர் பயிற்சி பெற்றிருந்தாலும் கணக்கீட்டு மரபுவழிசார் முறைகளைப் பயன்படுத்தி ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்காக டேவிட் கிரே நன்கு அறியப்படுகிறார்.

உருசெல் கிரே
Russell Gray
பிறப்புஉருசெல் டேவிட் கிரே
தேசியம்நியூசிலாந்து
பணிமொழியியலாளர்
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்மனித வரலாற்று அறிவியலுக்கான புதிய மேக்சு பிளாங்க் நிறுவனம்
Main interestsபடிவளர்ச்சிக் கொள்கை, கணக்கீட்டு மரபுவழி சார்பு

விலங்குகளின் அறிவாற்றல் பற்றிய ஆராய்ச்சியையும் டேவிட் கிரே ஈடுபட்டார். நியூ கலிடோனிய காகங்கள் பயன்படுத்தும் கருவிகளின் பயன்பாட்டை ஆய்வு செய்வது இவரது முக்கியமான ஆராய்ச்சி-திட்டங்களில் ஒன்றாகும். ஜெர்மனியின் பல்கலைக்கழகமான யெனா நகரிலுள்ள மேக்சு பிளாங்க் பொருளாதார நிறுவனம் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான ஆணையைப் பெறும் என்று 2014 ஆம் ஆண்டின் கோடையில் மேக்சு பிளாங்க் சங்கம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து யோகன்னசு கிராசுடன் சேர்ந்து டேவிட் கிரே 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் மனித வரலாற்று அறிவியலுக்கான புதிய மேக்சு பிளாங்க் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. University of Auckland University of Auckland
  2. "Profile of Russell Gray". Max Planck Institute. Archived from the original on 2018-10-28. பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசெல்_டேவிட்_கிரே&oldid=3914833" இலிருந்து மீள்விக்கப்பட்டது