உருசோவைட்டு

ஆர்சனேட்டுக் கனிமம்

உருசோவைட்டு (Urusovite) என்பது CuAlAsO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். தாமிரம் அலுமினியம் ஆர்சனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இளம் பச்சை நிறத்தில் ஒற்றைச்சரிவச்சு பட்டகக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. உருசியாவின் தூரக்கிழக்கு பிரதேசத்திலுள்ள கம்சாத்கா தீபகற்பத்தின் தோல்பாச்சிக் எரிமலைகளில் உருசோவைட்டு காணப்படுகிறது [1][2]. மாசுக்கோ மாநில பல்கலைக்கழகத்தின் படிகவியல் வேதியியலாளர் வேடிம் செர்கீவிச்சு உருசோவ் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது [3]. 1998 ஆம் ஆண்டு அனைத்துலக கனிமவியல் நிறுவனமும் இப்பெயரை அங்கீகரித்துள்ளது.

உருசோவைட்டுUrusovite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCuAlAsO5
இனங்காணல்
நிறம்இளம் பச்சை
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புசரியான பிளவு
முறிவுநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுபளபளப்பானது
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.672 nβ = 1.718 nγ = 1.722
இரட்டை ஒளிவிலகல்δ = 0.050
நிறப்பிரிகைr > v வலிமையானது
மேற்கோள்கள்[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Urusovite Data on Webmineral
  2. 2.0 2.1 Urusovite on Mindat
  3. "Mineralogicalassociation - Urusovite Data" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசோவைட்டு&oldid=3545181" இலிருந்து மீள்விக்கப்பட்டது