உருத்தேனிரிடோ ஓசுமின்

உலோகங்களிடை கலப்புலோக கனிமம்

உருத்தேனிரிடோ ஓசுமின் (Rutheniridosmine) என்பது (Ir,Os,Ru) என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ருத்தேனியம், இரிடியம் மற்றும் ஓசுமியம் ஆகிய தனிமங்களின் இயற்கையாகத் தோன்றும் கனிம உலோகக் கலவையாகும். அறுகோண வடிவத்தில் ஒளிபுகாப் படிகங்களாக, வெள்ளியைப் போன்ற-வெள்ளை நிறத்தில் உருத்தேனிரிடோ ஓசுமின்காணப்படுகிறது. இந்த கனிம உலோகக் கலவையின் உலோகத் துகள்கள் மோவின் கடினத்தன்மை அளவு கோலில் ஆறு என்ற கடினத்தன்மை மதிப்பை பெற்றுள்ளன. பிளாட்டினம், பலேடியம், ரோடியம், இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்கள் அசுத்தங்களாக உருத்தேனிரிடோ ஓசுமினுடன் காணப்படுகின்றன.[1]

உருத்தேனிரிடோ ஓசுமின் மற்றும் பிளாட்டர்சைட்டு கனிமங்களின் பிரதிபலிப்பு எலக்ட்ரான் படம்

உருத்தேனிரிடோ ஓசுமினுடன் இசுபெரிலைட்டு, ஓலிங்வொர்தைட்டு, இரிடார்செனைட்டு, உருத்தெனார்செனைட்டு, மைச்செனரைட்டு, இலாரைட்டு, கெவர்சைட்டு, மோன்சைட்டு மற்றும் குரோமைட்டு ஆகிய கனிமங்கள் சேர்ந்து தோன்றுகின்றன.[2]

கனடா நாட்டின் பிரித்தானிய கொலம்பியாவின் உரூபி கிரீக் மற்றும் புல்லியன் சுரங்கம் , அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள இசுபுரூசு கிரீக், சப்பான் ஆகிய நாடுகளில் உருத்தேனிரிடோ ஓசுமின் கிடைக்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Rutheniridosmine data on Mindat.org
  2. "The Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2022-06-26. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்தேனிரிடோ_ஓசுமின்&oldid=4109375" இலிருந்து மீள்விக்கப்பட்டது