உருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009

ஜூலை 2009 உருமுச்சி கலவரங்கள்[1] ஜூலை 5,2009 அன்று மக்கள் சீனக் குடியரசின் சிங்ஜியாங் மாநிலத் தலைநகர் உருமுச்சியில் ஆரம்பமாயின. முதல்நாள் ஆர்ப்ப்பாட்டங்களின் போது 1000[2][3][4] முதல் 3000[5] வரையான உய்கூர் இன சிறுபான்மையினர் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த சண்டை சிறிதுநேரத்தில் இனக்கலவரமாக ஹான் சீனர்களைத் தாக்குவதில் திரும்பியது[6][7]. ஜூலை 7 அன்று நூற்றுக்கணக்கான ஹான் சீனர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் காவலர்களையும் உய்கூர்களையும் தாக்கினர்[8]. ஜூலை 8 அன்று சீனாவின் அதிபர் கூ சிங்தாவ் 35ஆவது ஜி8 மாநாட்டிலிருந்து அவசரமாக நாடு திரும்பினார்[9].

2009 உருமுச்சி கலவரங்கள்
Ürümqi riots
உருமுச்சி கலவரங்கள், ஜூலை 2009 is located in சீனா
உருமுச்சி
உருமுச்சி
சீனாவில் உருமுச்சியின் அமைவிடம்
இடம்உருமுச்சி, சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பகுதி,  சீனா
நாள்5 ஜூலை 2009
இறப்பு(கள்)குறைந்தது 184
காயமடைந்தோர்1,680

இந்த வன்முறை பலகாலமாக பெரும்பானமை இன ஹான் சீனர்களுக்கும் சிறுபான்மை உய்கூர்களுக்கும் இடையே புகைந்துவரும் இன வேறுபாடுகளின் வெடிப்பேயாகும். உய்கூர்கள் துருக்க இனத்தைச் சேர்ந்த இசுலாமியர். கலவரம் நிகழக் காரணமாக அமைந்தது, குவாங்டாங் மாநிலத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த இனச்சண்டையில் இறந்த உய்கூர் தொழிலாளர்கள் குறித்த சீன நடுவண் அரசின் மெத்தனமே[2][5][10]. அதிகாரிகள் கூற்றுப்படி, மொத்தமாக 184 பேர் இறந்தனர்; 1680 பேர்[11] காயமுற்றனர். பல வாகனங்களும் கட்டிடங்களும் சேதமடைந்தன[3][11]. காவலர்கள் கண்ணீர்புகை குண்டுகள், நீர்பீச்சிகள், கவச வண்டிகள் மற்றும் சாலைத்தடைகள் கொண்டு கலவரத்தை அடக்க முயன்றனர். அரசு ஊரடங்கு சட்டம் விதித்து அமைதி காத்தது[3][12][13]. இணைய அணுக்கத்தையும் கைபேசி சேவைகளையும் உருமுச்சியில் தடை செய்தது[14][15].

கலவரத்தின் காரணம் சர்ச்சைக்குள்ளானது. இறந்த இரு உய்கூர் தொழிலாளிகளின் பொருட்டே கலவரத்திற்கு முன்னோடியான போராட்டம் துவங்கியதாக இருப்பினும் சீன நடுவண் அரசு இந்தக் கலவரங்கள் வெளிநாட்டிலிருந்து உலக உய்கூர் பேரவையால் (World Uyghur Congress (WUC)) திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டதாகக் கூறுகிறது[16]. WUC இன் தலைவர் ரெபியா காதிர் இந்தக் குற்றசாட்டுகளை மறுத்துள்ளார்[10].

மேற்கோள்கள் தொகு

  1. அரசு ஊடகங்களும் அதிகாரிகளும் இதனை'乌鲁木齐“7·5”打砸抢烧严重暴力犯罪事件' என குறிக்கின்றனர் (மொழிபெயர்ப்பு.உருமுச்சி 7·5 கலவரம் தீவிரமான வன்முறை குற்ற நிகழ்வு).
  2. 2.0 2.1 "Uighur Unrest". Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  3. 3.0 3.1 3.2 Civilians die in China riots, அல்ஜசீரா
  4. China's Xinjiang hit by violence, பிபிசி
  5. 5.0 5.1 China in deadly crackdown after Uighurs go on rampage, டைம்ஸ்
  6. Migrants Describe Grief From China’s Strife நியூயார்க் டைம்ஸ்
  7. Han Chinese launch revenge attacks on Uighur property[தொடர்பிழந்த இணைப்பு]
  8. Riots engulf Chinese Uighur city, பிபிசி
  9. Hu holds key meeting on Xinjiang riot, vowing severe punishment on culprits , சின்குவா
  10. 10.0 10.1 Riots in Western China Amid Ethnic Tension, நியூயார்க் டைம்ஸ்
  11. 11.0 11.1 Number of injured in Urumqi riot increases to 1,680, சின்குவா
  12. Uighur unrest threatens Beijing rulers' biggest party for a decade, டைம்ஸ்
  13. Uighur Muslims riot as ethnic tensions rise in China, கார்டியன்
  14. Residents say Internet down in Xinjiang riot city, ராய்ட்டர்ஸ்
  15. Internet cut in Urumqi to contain violence: media, கூகிள்
  16. Civilians and armed police officer killed in NW China violence, சின்குவா