உருளுறையக் கனி
உருளுறையக் கனி (silique) அல்லது உறைக்கனி என்பது ஒரு கனிவகை ஆகும். இதற்கு கீழ்மேல்வெடி கனி[1] என்ற பொருளும் உண்டு. இது இரு இணைந்த சூழிலைகளைக் கொண்ட நீளமான கனி. இந்தக் கனியானது நீளத்தை விட மூன்று மடங்கு அகலம் கொண்டது.[2] மூன்று மடங்கு அகலம் குறைவாக இருக்கும்போது காய்ந்த காயாக இருக்கிறது. கனி முதிர்ந்தவுடன் கனி உறையானது வெடிக்கிறது. இவ்வகை கனியானது பிரஸிகேவியே குடும்பத்தில் காணப்படுகிறது. சில சிற்றினங்களில் இக்கனியை ஒத்த சிறிய கனி சிற்றுறைக்கனி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[3] மேலும் இதனுடன் ஒத்த சில தாவர இனங்களில் கனி முதிர்ச்சி அடையும்பொழுது வெடிப்பது இல்லை. இதற்கு வெடியா உறைக் கனிகள் என்று பெயர்.
வேறு பெயர்
தொகுகாளான்குடைத் தாம்பு (குடைதாங்கும் குறுகிய நீண்ட காம்பு)[4]
காட்சிமேடை
தொகு-
Lunaria annua – சிற்றுறைக் கனிகள்]]
-
Capsella bursa-pastoris - சிற்றுறைக் கனிகளுடன்
-
Raphanus sativus முள்ளங்கியின் வெடிப்பு உறைக்கனிகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ https://ta.wiktionary.org/wiki/silique
- ↑ Hickey, M.; King, C. (2001). The Cambridge Illustrated Glossary of Botanical Terms. Cambridge University Press.
- ↑ Kristin Huisinga; Lori Makarick; Kate Watters (2006). River and Desert Plants of the Grand Canyon. Mountain Press Publishing Company. pp. 241–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87842-523-5.
- ↑ https://ta.wiktionary.org/wiki/siliqua
வெளி இணைப்புகள்
தொகுhttps://www.frontiersin.org/articles/10.3389/fpls.2020.00580/full