உருளை அச்சு இயந்திரம்

உருளை அச்சு எந்திரம் (Cylinder press) என்பது அச்சுத்தொழிலில் பயன்படும் ஓர் எந்திரமாகும். இதில் அச்செழுத்து முடுக்கப்பட்ட சட்டம் கிடையாகக் கிடத்தப்பட்டிருக்கும். நன்கு பொருத்தப்பட்ட அது முன்னும் பின்னும் சென்று வரும். பின்னே செல்லும் போது அங்குள்ள மை உருளைகள் எழுத்துகளின் மீது மை தடவும். முன்னோக்கி வரும்போது அங்கு தாள் சுற்றிய உருளை சுழலும். அப்போது அவ்வுருளையோடு இணைந்த தாளில் அச்சுப் பதியும். பின் உருளை அவ்விடத்தை விட்டு அகன்றவுடன் அதனோடு இணைந்திருந்த அச்சுப் பதிந்த தாள் தனியே பிரிந்துவிடும். மீண்டும் உருளையில் புதிய தாள் சுற்றப்படும். இதில் பெரிய தாள்களும் கூட அச்சிட முடியும். அதாவது ஒரே நேரத்தில் 16 பக்கங்கள் அல்லது 32 பக்கங்கள் அச்சிட முடியும். இந்த உருளை எந்திரங்கள் மின் விசையால் மட்டுமே இயங்கும். இதில் ஒரே சமயத்தில் மணிக்கு இரண்டாயிரம் படிகளுக்கு மேல் அச்சிட முடியும்.[1]

படக்காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளை_அச்சு_இயந்திரம்&oldid=3047818" இலிருந்து மீள்விக்கப்பட்டது