உரூபர்ட் வில்டிட்
உரூபர்ட் வில்டிட் (Rupert Wildt) (/ˈvɪlt/; ஜூன் 25, 1905 - ஜனவரி 9, 1976) ஒரு செருமானிய-அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1]
உரூபர்ட் வில்டிட் | |
---|---|
பிறப்பு | ஜூன் 25, 1905 மூனிச், செருமானியப் பேரரசு |
இறப்பு | ஜனவரி 9, 1976 (அகவை 70) ஆர்லியான்சு மசாசூசட் |
குடியுரிமை | அமெரிக்கர் |
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் |
விருதுகள் | எடிங்டன் பதக்கம் (1966) |
இவர் செருமானியப் பேரரசின் மூனிச் நகரில் பிறந்தார். அங்கேயே இவர் முதல் உலகப் போரின்போது வாழ்ந்தார். பின்னர் 1927 இல் பெர்லின் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. இவர் கோட்டிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வான்பொருள்களின் வளிமண்டலங்களின் இயல்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
இவர் 1932 இல் வியாழனின் கதிர்நிரலையும் பிற கோள்களின் கதிர்நிரல்களையுமாய்வு செய்தார். அவற்றில் உள்ள உட்கவர்ச்சிப் பட்டைகள் நீரகத் தனிம்ம் கெறிந்த மீத்தேன், அமோனியா சேர்மங்களைச் சார்ந்தன என இனங்கண்டார். இவற்ரின் உட்கூறுகள் சூரியனையும் பிற விண்மீன்களையும் ஒத்துள்ளதை அறிவித்தார்.
கோள்களின் வளிமண்டலம் இந்த வளிமக் கூறுகளால் ஆயதாகக் கொண்டு, 1940 களிலும் 1950 களிலும் கோள்களின் கட்டமைப்புக்கான படிமத்தை உருவாக்கினார். இவர் கோள்களின் அகடு பாறைகளாலும் உயரெடை பொன்மங்களாலும் அப்புறம் அகட்டின் மேற்புறம் தடிப்பான பனிப்போர்வையாலும் அதற்கும் மேல் அடர் வளிம வளிமண்டலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்றார். இவரது கோள்படிமம் இன்றும் பரவலாக ஏற்கப்படுகிறது.
இவர் 1934 இல் அமெரிக்கவுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கே பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் 1937 முதல் 1942 வரை ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். இவர் பின்னர், யேல் பல்கலைக்கழகத்தில் புல உறுப்பினராகச் சேரும் முன்பு 1947 வரை வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவர் 1937 இல் வெள்ளியின் வளிமண்டலம் பார்மால்டிகைடு பனிமூட்டத்தால் செறிந்துள்ளதாக முன்மொழிந்தார். இவரது நோக்கிடுகள் அங்கே நீர் உள்ளதைக் காணவில்லை. ஆனால் பினால் செய்த வளிமக்கூண்டு ஆய்வு வெள்ளியில் நீருள்ளதை நிறுவியதும் இவரது கருதுகோள் கைவிடப்பட்டது. என்றாலும், இவர் 1940 இல்வெள்ளி வளிமண்டலத்தில் உள்ள கரியமில வளி வெப்பத்தைச் சிறைபிடிப்பதாக்க் கூறினார். இது பின்னால் பசுமைக்குடில் விளைவு எனப் பெயர்பெற்றது.
இவர் 1939 இல் சூரிய வளிமண்டல ஒளியூடுறுவாமைக்கு நீரக நேர்மின்னணுக்களே (H− ions) முதன்மையான காரணம் எனச் செயல்முறை விளக்கம் தந்தார். இதனால், இவையே சுரியன், விண்மீன்களின் கட்புல ஒளிக்கும் காரணம் எனக் கூறினார்.
இவர் 1965 முதல் 1968 வரை வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழகாங்களின் கழகத்திந்தலைவராகச் செயல்பட்டார். இவர் 1966 முதல் 1968 வரை யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையின் தலவராக விளங்கினார். இவர் 1973 முதல் தன் இறப்புவரை அங்கேயே தகைமைப் பேராசிரியராக இருந்தார். இவர் மசாசூசட் ஆர்லியான்சில் இறந்தார்.
விருதுகளும் தகைமைகளும்
தொகு- எடிங்டன் பதக்கம், 1966[2]
- குறுங்கோள் 1953 உரூபர்ட்வில்டிட் இவரது பெயர் தாங்கியுள்ளது.
- நிலாவின் குழிப்பள்ளம் வில்டிட் இவரது பெயர் தாங்கியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Obituary: Rupert Wildt". Physics Today 29 (4): 89. April 1976. doi:10.1063/1.3023456. http://www.physicstoday.org/resource/1/phtoad/v29/i4/p89_s3?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-01-11.
- ↑ "Award of the Eddington Medal to R. Wildt (presidential address)". Quarterly J. of the RAS 7: 120. 1966. Bibcode: 1966QJRAS...7..120.. http://adsbit.harvard.edu//full/seri/QJRAS/0007//0000120.000.html.